உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!

மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லி பயணம் குறித்த நிருபர்கள் கேள்விக்கு, 'மவுனம் அனைத்தும் நன்மைக்கே' என்று ஒற்றை வரியில் செங்கோட்டையன் பதில் அளித்துவிட்டு சென்றார்.அ.தி.மு.க., பொதுச்செயலர் இ. பி. எஸ்., உடன், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, கருத்து வேறுபாடு நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.மு.க., எம்எல்ஏ கூட்டங்களையும், செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இது அரசியல் வட்டாரங்களில் முரண்பாடு நிலவுவதாக பேச்சை சூடு பிடிக்க செய்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். இதற்கிடையே, கடந்த வாரம் இ. பி. எஸ்., கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் டில்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.அவர் தமிழகம் திரும்பிய நிலையில், கடந்த 28ம் தேதி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், தனியே டில்லி சென்றார். அங்கு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 31) டில்லி போனீங்களா? தொடர்ச்சியாக மவுனமாக இருக்க காரணம் என்ன? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மவுனம் அனைத்தும் நன்மைக்கே' என்று ஒற்றை வரியில் செங்கோட்டையன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Raj
ஏப் 01, 2025 20:40

யாருக்கு நன்மை என சொல்வாரா. இவருக்கெல்லாம் எதுக்கு இஜட் பாதுகாப்பு. இபிஸ் கால்ல விழுந்து பதவி வாங்குனார்னு சொல்றவங்க இப்ப என்ன சொல்லப் போறாங்க.


Rajesh
ஏப் 01, 2025 18:58

தலைமை பதவிக்கு ஆசை பட்டு,காலில் விழுந்து காலை வாரியவர் நினைவு உண்டா? காலம் சுழலும்


chandrasekaran p.m.
ஏப் 01, 2025 10:10

அதிமுகவிலிருந்து அடிக்கடி யாராவது டெல்லி போகவும், உபிஸ் கூட்டணி கதறல் ஆனந்தமாக இருக்கிறது.


மணியனு
ஏப் 01, 2025 09:39

நாலரை ஆண்டுகாலம் மோடி,அமித் ஷா ஆதரவில் ஆட்சி நடத்தி ஏராளமான சொத்தை குவித்து விட்டு நன்றி மறந்து எம்ஜிஆரால் தீயசக்தி என்று செல்லப்பட்ட திமுகவுடன் கள்ள உறவு கொண்டுள்ள துரோகி எடப்பாடிக்கு தகுந்த தண்டனை கிடைத்தே தீரும்.


RAMESH
ஏப் 01, 2025 09:13

கட்டு மரம் தன் குடும்பத்திற்கு பதவி கேட்க டெல்லி சென்று..... .காவடி எடுத்தது.....


Durai Kuppusami
ஏப் 01, 2025 07:20

இவன் ஒரு டம்மி பீஸ்..இவனுக்கெல்லாம் ஓவர் பில்டப் கொடுக்காமல் இருக்கணும்.


மாறன்
ஏப் 01, 2025 04:03

அரசியலில் அனாதை ஆவான் இது உறுதி


மதிவதனன்
ஏப் 01, 2025 00:31

தமிழ்நாட்டின் ஷிண்டேயே இந்த செங்கோட்டையன் , பிஜேபி க்கு வெட்கம் இன்றி இப்படி கூட்டு சேர்ந்தாள் தலைவர் சேருவான் ஆனா தொண்டன் பாவம் அடிமை கூட்டம்


Narasimhan
மார் 31, 2025 23:27

பாஜக ஒரு பொருட்டே இல்லை என்பீர்கள். இப்போது ஏன் தினந்தோறும் பயந்து சாகுறீங்க


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 23:13

ஜெயலலிதா அம்மா இல்லாததால், மோடியை தான் டாடியாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று வெளிப்படையாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னார். அதிமுக தலைவராக யாரை போடுவது என்று தீர்மானிப்பது அமித் ஷா. இப்போது செங்கோட்டையனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க அமித் ஷா தீர்மானித்துள்ளார். எடப்பாடி பதவி விலகுவது நல்லது. இல்லையெனில் ரைடுவந்து அவமானப்பட்டு விலக நேரிடும்.


சமீபத்திய செய்தி