‘சில்மிஷ’ தொழிலாளிக்கு தர்ம அடி
ஆத்துார்: சிறுமியரை சீண்டிய வேலு, 40, என்பவருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சேலம் மாவட்டம், ஆத்துாரைாச் சேர்ந்தவர் வேலு; தொழிலாளி. நேற்று (நவ.,9) இரவு, 7:00 மணிக்கு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, மூன்று சிறுமியரை அழைத்துள்ளார். 10, 9, 8 வயதான மூவரிடமும் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியர் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், வேலுவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின், ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். காயமடைந்த வேலுவை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.