உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்

எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்

சென்னை; எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு: நியோ டைடல் பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமரவாதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளுடன், 766 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்குப் புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்துப் போனேன்.இந்திய மாநிலங்களைக் கடந்து, உலக அளவிலும் அங்கீகாரம் பெறும் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் 2026 தேர்தல் வெற்றியுடன் இன்னும் வீரியத்துடன் தொடரும்.ஆனால், அதற்கு முன்பாக நம்முன் உள்ள பணி எஸ்ஐஆரில் இருந்து நம் வாக்குரிமையைப் பாதுகாப்பதே. இதுகுறித்து தொடர்ந்து பேச வேண்டும், விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sundaran
நவ 10, 2025 19:00

ஒரு நாளைக்கு நான்கு கொலைகள் நாற்பது திருட்டு நடக்கிறது .இதை தடுக்க நடவடிக்கை இல்ல வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை முடக்குவது தான் மிகவும் முக்கியமோ. 2026 தேர்தலில் 50 சீட் தேறுமா?


panneer selvam
நவ 10, 2025 16:47

Stalin ji , do not try to follow your younger brother Rahul Babu ignorant accusation . You say SIR is required but you are giving lame excuses to justify your younger brother wrong stand.


N S
நவ 10, 2025 16:39

"எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்." அப்பாவின் கூற்று உண்மையே. மீண்டும் அரியணை ஏற, திராவிட மாடல் ஆட்சிக்கு ஒட்டு போடும், இறந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள், மற்றும் எத்தனையோ பேர்களுடைய வாக்குரிமையை பாதுகாக்க வேண்டாமா?


ASKR TRUST
நவ 10, 2025 16:32

இதை நீதி மன்றத்தில் போய் சொல்லுங்க. மக்கள்கிட்ட ஏன் கம்பு சுத்துறீங்க..


பாரத புதல்வன்
நவ 10, 2025 15:56

டோப்பா விடம் இருந்து தமிழகத்தை மீட்பதே தலையாய பணி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை