வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எப்போதுமே கீழ்நிலை ஊழியர்களே பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
Useless Govt/Pvt Hospitals will Not even have First Aid Kits. Stop All Salaries
மேலும் செய்திகள்
பெண் போலீசை தாக்கிய ஏட்டு கைது
11-Sep-2026
தென்காசி: கடையநல்லுாரில், உரிய சிகிச்சை கிடைக்காமல் வியாபாரி சுடர்மணி, 66, இறந்ததால், ஜி.ஹெச்., செவிலியர்கள் இருவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லுார் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுடர்மணி. முறுக்கு வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாக்குப்பையை அகற்றியபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்ததாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா விசாரணை நடத்தினார். நோயாளி குறித்து முறையாக மருத்துவருக்கு தகவல் தெரிவிக்காத, இரு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடையநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எப்போதுமே கீழ்நிலை ஊழியர்களே பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
Useless Govt/Pvt Hospitals will Not even have First Aid Kits. Stop All Salaries
11-Sep-2026