உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் அரசியல் முழக்கமாக மாறிய சமூக நீதி: கவர்னர் ரவி வேதனை!

வெறும் அரசியல் முழக்கமாக மாறிய சமூக நீதி: கவர்னர் ரவி வேதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஒரு காலத்தில் அம்பேத்கர் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது,'' என கவர்னர் ரவி கூறினார்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: விரிவான, வலுவான மற்றும் உறுதியான அரசியலமைப்பை வடிவமைப்பதிலும், நீதிசார்ந்த மற்றும் சமத்துவ இந்தியாவுக்கான அரசியலமைப்பு அடித்தளத்தை அமைப்பதிலும் அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார். தலித் சமுதாயத்திற்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் தலித்துகளின் துயரமான நிலையை எதிர்கொள்கின்றனர். அச்சமூக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளில் தண்டனை பெறுவோர் சதவீதம், கவலையளிக்கும் வகையில் தேசிய சராசரி தண்டனை விகிதத்தில் பாதியாக உள்ளது.ஒரு காலத்தில் அம்பேத்கர் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர்களுக்குப் பதவி மறுப்புச் செய்திகள் இந்தக் கடுமையான அநீதியை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டை நாடு ஆண்டு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த தருணம் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமைய வேண்டும். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்தவும் உள்வாங்கவும், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

joe
டிச 07, 2024 15:37

திராவிடம் என்கிற வார்த்தையை அரசியல் வாதிகள் பயன்படுத்தி அரசியலை வியாபாரமாக்கி, சமூக நீதி என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறார்கள் . இதுதான் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. தமிழன் எல்லோரும் அரசியல் வாதிகளுக்கு அடிமைபோலத்தான் இருக்கிறார்கள். இது சுப்ரீம் கோர்ட்டுக்கே வெளிச்சம் போல் தெரிந்திருந்தும் எந்த முன்னேற்றமும் தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. தமிழன் என்றும் தரித்திரம் பிடித்தவனே.


joe
டிச 07, 2024 14:41

அம்பேத்காருக்கு மாலை மரியாதை இட்டு, அடுத்தவேளையே ஊழலே கத்தி என வலி வகுக்கும் தமிழா அரசியல் வாதிகள்தான்.


Kasimani Baskaran
டிச 07, 2024 07:33

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு விகிதாசாரத்தை விட அதிகமாக மந்திரி சபையில் இடம் கொடுக்க வேண்டும். PhD வாங்கியிருந்தாலும் பிளாஸ்டிக் சேர் மற்றும் தரையில் அமர வைத்து பேசும் தீம்காவுக்கு பகுத்தறிவோ அல்லது அரசியலமைப்புச்சட்டம் பற்றிய புரிதலோ கிடையாது. தமிழகத்தில் எம்எல்ஏ மற்றும் எம்பி க்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர்தான் விகிதாச்சாரப்படி மிக அதிகம். ஆகவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது உண்மை என்றால் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் அதுதான் சமூக நீதியின் ஆரம்பம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:39

இன்னொரு இடத்துல புத்தக வெளியீட்டு விழா நடக்குதே .... அதைத்தான் சொல்லியிருப்பார் .....


வைகுண்டேஸ்வரன்
டிச 07, 2024 02:44

//சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும்// அய்யய்யே.. ரவி தாத்தா, நீங்கள் கவர்னர். கட்சி தலைவர் இல்ல. நடந்த கூட்டமும் அரசு விழா, கட்சி பொதுக்குழு கூட்டம் அல்ல.


ghee
டிச 07, 2024 05:33

அய்யா போலி gazetted officer வைகுண்டம் .இப்போ உன் மொக்கை கருத்தால் தெரியுது நீ ஒரு ஒரிஜினல் திராவிட கொத்தடிமை என்று....ஓரமா போய் விளையாடு


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:44

வைகுண்டம் .... சமூக நீதிக்காகப் போராடுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை .... ஆளுநர் என்பவர் மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற உண்மை தெரியாதா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 13:58

சமூக நீதி, திருக்குறள், தமிழின் பெருமை, தமிழர் பெருமை ..... இவற்றையெல்லாம் திமுக தவிர வேறு யாரும் பேசக்கூடாது ....


ராமகிருஷ்ணன்
டிச 07, 2024 02:26

கொஞ்ச நாளாக கவர்னர் வெவகாரம் எதுவும் இல்லையே என்று பார்த்தால். இப்ப வருவாங்க பாருங்க, திமுக அல்லக்கைகள், அடிமை ஊடகங்களின் கதறல் காதுகள் கிழியும்.


Priyan
டிச 07, 2024 00:26

ஏதோ இந்தியா முழுவதும் சமூக நீதி தழைத்தோங்குவது போலவும் தமிழ் நாடு பின் தங்கி விட்டது போலவும் உள்ளது ஆளுநரின் கருத்து. தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட சமூக நீதியில் ஓரளவு முன்னேறி இருப்பதே ஆண்ட கட்சிகளின் பங்களிப்புதான். தமிழ் நாட்டு மக்கள் ஏன் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரண்டு திராவிட கட்சிகளை தாண்டி யோசிக்க மாட்டேன்கிறார்கள் என்பதை ஆளுநருக்கு யாராவது விளக்குவது நல்லது.


Mettai* Tamil
டிச 07, 2024 10:59

ஆமாங்க, தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட சமூக நீதியில் ஓரளவு இல்லீங்க ரொம்பவே முன்னேறி உயரமான தொட்டியில நிலை நாட்டியிருக்குங்க . ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாடியே காமராஜருக்கு பதிலா, திராவிட கட்சிகளை தேர்ந்தெடுக்காதது மக்களோட தப்புங்க ....


T.sthivinayagam
டிச 06, 2024 23:25

என்ன செய்வது கடவுளுக்கு முன்னால் தட்சணை பணம் வாங்கினாலும் லஞ்சம் என திராவிடர்கள் நிலை இன்னும் உள்ளது


sankaranarayanan
டிச 06, 2024 21:14

மகாராஷ்டிராவில் அம்பேத்காரரை உருவாக்கியதே மாணவனாக மேதாவியாக அவரை படிக்க வைத்து அரவணைத்து ஆளாக்கியதே ஒரு அந்தணன் என்றே சொல்வார்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் அம்பேதகர் இருந்ததால்தான் அவரால் சட்ட நிபுணராகவும் சமூகநீதிக்கு போராடி வெற்றி காணமுண்டிந்தது இதை யாருமே சொல்லமாட்டார்கள்


GMM
டிச 06, 2024 20:16

அம்பேத்கார் தலித் சமூகத்திற்கு வழங்கிய அரசியல், கல்வி, வேலை வாய்ப்பை 75 ஆண்டுகள் ஆகியும் சமூகம் ஒன்றுபட்டு பயன்படுத்தவில்லை. ? ஆனால், சிறுபான்மை மக்கள் அதிகம் பயன்படுத்தி கொண்டனர். அம்பேத்கார் சலுகையை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று கூறவில்லை. மதம் மாறினால் /கலப்பு திருமணம் புரிந்தால் மேன்பட முடியும் என்று தவறாக புரிந்து விட்டனர். மேலும் இந்து தெய்வ வழிபாடு முறையில் திராவிடம் தலித் மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டனர். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் திராவிடம் போராடிய பழங்குடி இனம் தான் . வீரமணி, சிறுத்தை, திராவிட கூட்டம் ஒரு நாள் முன்பு வரவேற்க சென்று இருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஏமாற்று அரசியல் முழக்கம் பின் அதிகம் சென்றதால் தான் தலித், பழங்குடி மக்கள் சமூக நீதி பெற முடியவில்லை. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை