உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சில் மட்டும் சமூக நீதி; செயலில் அல்ல: திமுகவை சாடிய அண்ணாமலை

பேச்சில் மட்டும் சமூக நீதி; செயலில் அல்ல: திமுகவை சாடிய அண்ணாமலை

சென்னை: ''திமுக அரசாங்கத்தின் கீழ், 'சமூக நீதி' என்பது பேச்சில் மட்டுமே உள்ளது, செயலில் அல்ல'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.நரிக்குரவர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் கல்வி மறுக்கப்படுகிறது என கூறும் வீடியோவை அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின், நீங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியா இது?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bott1n85&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0https://x.com/annamalai_k/status/1955102140252426562பிரதமர் மோடி நரிக்குரவர் சமூகத்தை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். மேலும் திமுக அரசு அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உட்பட ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் கதவுகளையும் அவரது பெற்றோர் தட்டியுள்ளனர், ஆனால் அவர்கள் அலட்சியமாகவே இருந்தனர். திமுக அரசாங்கத்தின் கீழ், 'சமூக நீதி' என்பது பேச்சில் மட்டுமே உள்ளது, செயலில் அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

mluxman
ஆக 12, 2025 19:31

முதலில் இப்படி சொல்வதை நிறுத்துய்ங்க கேள்வி கேட்க இந்தியா நாட்டில் பிறந்த அனைவர்க்கும் உரிமை இருக்கு நீங்கள் பாதிக்கப்படும் போது பொது தான் தெறியும் உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் கவுன்சிலர் ஆகி தான் கேட்பிங்களா


Mario
ஆக 12, 2025 12:47

அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை