உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூரிய சக்தி மின் திறன்; தமிழகம் 4வது இடம்

சூரிய சக்தி மின் திறன்; தமிழகம் 4வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன; பெரிய கட்டடங்களில் குறைந்த திறனில் கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கவும் ஆர்வம் காட்டுகின்றன.கடந்த ஜனவரி நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையம் நிறுவுதிறனில் ராஜஸ்தான், 18,795 மெகாவாட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 10,548 மெகாவாட்டுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும்; கர்நாடகா, 9,463 மெகாவாட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.தமிழகம், 7,426 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதில் கூரை சூரியசக்தி மின்சாரத்தின் பங்கு, 449 மெகாவாட். தற்போது மின் தேவை அதிகரிப்பிற்கு, மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது முக்கிய காரணம். எனவே, பிரதமரின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அதிகளவில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதன் வாயிலாக, மின் வாரியத்தின் சுமை குறையும். தனியார் மின் கொள்முதலும் குறையும் என்பதால், மின் வாரியத்தின் செலவுகள் கணிசமாக சரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
பிப் 22, 2024 10:17

உதயசூரியன் முன்னேற உதவாது????. முதல் மூன்று மாநிலங்களும் மக்கள் தொகையில் நம்மை விட சிறியவை.


rama adhavan
பிப் 22, 2024 07:59

திட்டம் பயன் அடைய வேண்டுமானால் உபரி மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும். அரசு ஆண்டாண்டு பழுது பார்க்க மாண்யம் தர வேண்டும். மின் வாரிய ஆட்கள் லஞ்சம் பெறாமல் உதவி செய்ய வேண்டும். சிறிய வீடுகளுக்கு இத்திட்டம் உதவாது.


duruvasar
பிப் 22, 2024 07:32

"கருணா பசுமை மின் திட்டம்" விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.


Ramesh Sargam
பிப் 22, 2024 07:11

தனியார் நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன.. வேப்பமர கன்றுகள் நடுவதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கும் தமிழக அரசு, ஏன் இதுபோன்ற மின் உட்பத்திக்கு ஒரு சில நூறு கோடிகளை ஒதுக்க மறுக்கிறது? தனியார் நிறுவனங்கள் ஆவல் காட்டும்போது, தமிழக அரசு ஏன் காட்டுவதில்லை


J.V. Iyer
பிப் 22, 2024 07:08

அரசு எப்படி செயல்படும்போதே நான்காவது இடம் என்றால், நன்றாகச்செயல் பட்டால்? ஆஹா.. அதற்குத்தான் பாஜக வேண்டும் என்பது.


மேலும் செய்திகள்