உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலமன் பாப்பையா காலமானார்

சாலமன் பாப்பையா காலமானார்

மதுரை: பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, 90, காலமானார்.மதுரையைச் சேர்ந்தவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவருக்கு வயது,90. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக, வயது முதிர்வு காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dge9sybl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (செப் 11) அவர் மதுரையில் காலமானார்; இவர் எளிய தமிழில் ஆழமான கருத்துக்களை பேசி பட்டிமன்றங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்.1936ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்தார்.தமிழ்ப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார். உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்துள்ளார். தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவு செய்து அறிந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்

கவர்னர் அர்லேகர்

பிரபல தமிழ் பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் விஜய்

தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்:

சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ்

தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா.அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்

படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மநீம தலைவர் கமல்

பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை

சிறந்த தமிழறிஞரும், பட்டிமன்றங்கள் மூலம் சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவருமான, பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.சாலமன் பாப்பையா குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

எதிர்தமில்
செப் 11, 2026 21:21

திரு பாப்பையா தமிழறிஞர் திராவிட இயக்கங்கள் கொள்கை சன் டிவியின் ட ட்றக்க்கு மிக பெரிய பங்காற்றியவர்.இவரை விட தன்னலமற்ற தியாகி திரு வேதாந்தம் அவரைபற்றி நினைவு கூறஇந்த தலைவர்கள்முன்வரவில்லை அண்ணாமலை உட்பட..கடவுள் தீர்மானிப்பார் யாரால் சமுதாயம்பயன்அடைந்தது


Palanisamy T
செப் 11, 2026 21:08

இவரின் மறைவைக் கேட்டு நெஞ்சமே வலிக்குதய்யா?. இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.


Ketheesh Waran
செப் 11, 2026 20:53

இங்கு கருத்து தெரிவிக்கும் சில தற்குறிகள் பாப்பையா திமுகவுடன் தொடர்பில் இருந்தாரென பாரதூரமான செயல்போல கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக என்ன எதிரி நாட்டு கட்சியா? திமுக தமிழ்நாட்டில் உருவாகி தமிழ்நாட்டை அதிக வருடங்கள் ஆட்சி செய்த கட்சி


ராஜா
செப் 12, 2026 08:38

ஸ்டாலின் மாதிரி பேசக்கூடாது.


ஆரூர் ரங்
செப் 12, 2026 08:43

மனித குலத்திற்கே எதிரானது திமுக


V RAMASWAMY
செப் 12, 2026 09:08

சந்தேகமில்லாமல் தங்கள் குடும்ப நலம் மட்டுமே கொண்ட தி மு க கொள்கைகள் மக்கள் விரோத மக்கள்நல, சனாதன, ஹிந்து கடவுள் ஒரு குறிப்பிட்ட சமூக விரோத இல்லாத திராவிட மாயை கொண்ட தீய சக்தி தான்


Chandhra Mouleeswaran MK
செப் 11, 2026 20:07

என்ன செய்வது? தமிழ்ப்பணியை மட்டும் செய்திருந்தால் மனமாரப் பாராட்டலாம் சுய லாபத்திற்காக அரசியலை, அதிலும் திரராவிட அரசியலைத் தூக்கித் தலைமேல் வைத்திருந்தகால் பாராட்ட முடியாமல் இரங்கல் தெரிவிக்க முடியாமல் சங்கடப்பட வேண்டி இருக்கிறது இவரது இரட்டை அர்த்தப் பச்சைத் தமிழிற்காகத் திட்டாமல் இருப்பதே பெரிய இரங்கல் செய்தி


Raj Kamal
செப் 11, 2026 21:52

அவ்வளவு கடினப்பட்டு இந்த இரங்கல் செய்தியை நீங்கள் சொல்லமால் தவிர்த்திருக்கலாம். மட்டுமல்ல நீங்கள் சொன்னது இரங்கலே அல்ல. இது ஒருவகை மனநோயின் வெளிப்பாடு.


இராம தாசன்
செப் 11, 2026 20:03

நல்ல பெயரை அனாவசியமாக கடைசி காலத்தில் கெடுத்துக்கொண்டார் - திருப்பரங்குன்ற விவகாரத்தில் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில்.. நல்ல மனிதர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் / பலரை முன்னெற்றி விட்டவர் - அன்னாரின் ஆன்மா இறைவன் அடியில் இளைப்பாற பிரார்திக்கிறேன்


இராம தாசன்
செப் 11, 2026 19:57

அது எல்லாம் ஆபாச படம் எடுப்பவர்களுக்கு மட்டும் தான்.. தமிழ் வளர்த்தவர்களுக்கு இல்லை


Venkat
செப் 11, 2026 19:18

அருமையான பேச்சாளர், தமிழ் அறிஞர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


Raj Kamal
செப் 11, 2026 19:14

மனம் ஏனோ மிகவும் வலிக்கிறது. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வந்ததில் இருந்து இவரைப் பார்த்தும், கேட்டும் வளர்த்தோம். மிக அருமையான அதே சமயம் எளிமையான தமிழ். இனி என்ன செய்வோம்? தெரியவில்லை... அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 11, 2026 18:15

நல்லவேளையாக கிறித்தவ முறைப்படி அடக்கம் செய்யாமல் தனது உடலை மின் மயானத்தில் எரியூட்டும்படி உயில் எழுதிவைத்துள்ளார். அடக்கம் செய்திருந்தால், நமது தயிர்வடை தலைவருக்கு செய்தது போல அலகாபாத் சங்கம் சென்று அஸ்தி கரைப்பார்கள்.


surya Krishna
செப் 11, 2026 17:52

ஆம் இயேசு சொன்ன பரமபிதாவாகிய சிவனிடம் அடைக்கலம் அடைந்தார்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி