உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சென்னை:காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., தினகரன் தலைமையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அதற்காக, தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கண்டறிந்தார்.இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்த போது, ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு இச்சிலையை, தொண்டை மண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர்.தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்.இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலை விரைந்து மீட்கப்படும். மற்ற சிலைகள் குறித்தும் விசாரணை நடப்பதாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.Varadarajan
அக் 04, 2024 04:18

தமிழக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமலா இந்த சிலை வெளிநாட்டுக்கு கணத்தப்பட்டது? விசாரணை அவசியம்


ko ra
அக் 02, 2024 15:53

யார் திருடினார்கள் என்று சொல்ல மாட்டார்கள்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 02, 2024 09:42

ஒன்னு சந்தோசம் பொங்குதேவின் கைவேலையாக இருக்கும் இல்லாங்காட்டி நான் அமைதியா யோசிக்கிறேன் யாராக இருக்கும் என்று ... சந்தோஷமோ அமைதியோ .. இருவரின் ஒருவர்தான் கடத்தல் பேர்வழிகள். காசுக்கு ஆசைப்பட்டு ஹிந்து கோவிலில் சிலையை திருடினவர்களின் குல நாசம் நிச்சயம்


Palanisamy T
அக் 03, 2024 07:48

திருடியவர்கள் குலநாசமென்றுச் சொல்லி நம் பொறுப்பையும் விவேகமாக சிந்தித்து செயல்பட்டவேண்டிய பொறுப்பிலிருந்து விலகியிருக்கவும் கூடாது. இவை யெல்லாம் இன்றளவும் நம்மிடையேவுள்ள பிறவிக் குணங்கள். குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படவேண்டும் . கடத்தப் பட்ட சிலையென்றால் மீட்கவும் வாய்ப்பிருக்கின்றது.


சமீபத்திய செய்தி