உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசு மீது குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சிலர்.... தாங்கி பிடிக்கிறார் திருமா!

திமுக அரசு மீது குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சிலர்.... தாங்கி பிடிக்கிறார் திருமா!

சென்னை: ''திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிற சிலர் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்'' என ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.சென்னையில் விசிக தலைவர் திருமாவளன் கூறியதாவது: அதிமுக, ஈவெரா பாசறையில் வளர்ந்த இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜ போன்ற சக்திகள் இங்கே, வளருவதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து வலுவாக இங்கே உண்டு. ஆனால் அவர்களை பின்பற்ற கூடிய இன்றைய தலைவர் பழனிசாமி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு கம்பளம் விரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த துணிச்சலில் தான் அதிமுக ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப கூடிய நிலையும் உருவாகி இருக்கிறது.இது அதிமுகவின் நிலை எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை உணர்த்த கூடியதாக இருக்கிறது. விஜய் அவர்களுக்கும் அதே போன்ற வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள் என்றால், விஜய் பேச்சிலும், செயலிலும் அந்த சாயல் இருப்பதாக நம்புகின்றனர் என்று தான் இதில் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. அவர் எச்சரிக்கையாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். பீஹாரில் எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு அமல்படுத்தவில்லை.

சட்டத்திலும் இடம்…!

அதனை சர்வே என்று தான் சொல்லி இருக்கிறார்கள். அது சாம்பிளிங் சர்வே, சென்செஸ் இல்லை. அதை ஜாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு ஏற்று கொள்ளாது. அதனை ஏற்றுக்கொள்ள சட்டத்திலும் இடம் இல்லை. சும்மா மாநில அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்று அடிப்படையில் சொல்கிறார்கள். ஒரு சர்வே தேவை என்கிற அடிப்படையில் மாநில அரசு எடுக்கலாம். அதனை நாங்களும் வரவேற்கிறோம்.

மக்கள் தொகை

நமக்கு ஒரு டேட்டா வேண்டும் என்கிற அடிப்படையில் எடுக்கலாம். அதனை அதிகாரபூர்வமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அது ஜாதிவாரி அடிப்படையில் நிகழ வேண்டும். இது தான் சரியான கோரிக்கை. ஆனால், திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிற சிலர் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

சமூக நீதி பக்கம்…!

திசை மாறி சமூக நீதி பக்கம் சென்றுவிட்டேனா? எங்களுக்கு அதிமுக மேல ஒரு மரியாதை உண்டு. திராவிட இயக்கம் அல்லது சமூக நீதி இயக்கம், ஈவெரா இயக்கம், அண்ணாதுரை இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் அடிப்படையில் தான், கருத்துகளை முன் வைக்கிறோம். இல்லையென்றால் இது பற்றி சொல்ல போவது இல்லை.

தவறாக புரிந்து…!

அதிமுக திராவிட இயக்கம் என்று நம்புகிறதால் இந்த கருத்தை முன் வைக்கிறோம். இல்லை இது திராவிட இயக்கம் என்று எல்லாம் கிடையாது, நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள், அப்படி எல்லாம் பேசாதீர்கள் திருமாவளவன் என்று சொன்னால் அடுத்த நொடியில் இருந்து அதனை பேச மாட்டேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

SIVA
ஆக 29, 2025 20:54

பழனிச்சாமி அவர்கள் பிஜேபி விட்டு தனியாக வந்தால் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைக்கும் , திமுகவில் உள்ள சில கூட்டணி காட்சிகள் சூடு சொரணை வந்து தன்னுடன் கூட்டணி வைக்கும் என்று தவறான கணக்கு போட்டார் , பின் தான் அவருக்கு உண்மை நிலை புரிந்ததது , அவர் தனியாக இருந்தும் அவர் பிஜேபி உடன் ரகசிய கூட்டணியில் உள்ளார் என்று அவரை வெறுப்பேறினீர்கள் , அவர் பிஜேபி உடன் கூட்டணி வைத்தார் இப்பவும் புலம்புகிண்றீர்கள் ....


VenuKopal, S
ஆக 28, 2025 22:31

அம்பேத்கார் ஒரு இனம் முன்னேற அரும் பாடுபட்டார். ஆனால் இவர் இரண்டு சீட்டுக்கு தன் இனத்தையே அடகு வைத்து பிழைத்தார்...


Sangi Mangi
ஆக 28, 2025 21:01

நீர்...... பிஜேபிக்கு காவடி , சொம்பு, தூக்கி தாங்கி பிடிப்பது போலவே??


Karthik
ஆக 28, 2025 20:25

நீங்க எத்தனை கட்சிகளை அவதூறாகப் பேசியிருக்கிறீங்க ?


Raj S
ஆக 28, 2025 20:22

ஆள்றவனத்தான் குறை சொல்லுவாங்க... இது கூட தெரியாத தற்குறிகள் கட்சி வெச்சு சம்பாதிக்குதுங்க தமிழகத்துல


பேசும் தமிழன்
ஆக 28, 2025 19:45

தி.மு.க. ஆட்சிக்கு முட்டு கொடுப்பதில்... யார் பெரியவர் என்பதில்.... திருமா, வைகோ இடையே கடும் போட்டி இருக்கும் போல் தெரிகிறது...


இராம தாசன்
ஆக 28, 2025 19:34

தி மு க கொள்ளைகை பரப்பு வேலை எப்போ இவருக்கு கொடுத்தார்கள் .. அப்புறம் ஆண்டிபட்டி ராசாவுக்கு கோவம் வந்த என்ன சொல்லுவார் என்று தெரியும். அப்போதும் திருமா கம்முன்னு தான் இருப்பார்


Nagarajan D
ஆக 28, 2025 18:56

இந்த ஒதுக்கீட்டு பிறப்புக்கு பிளாஸ்டிக் சேர் வேணுமே


Kjp
ஆக 28, 2025 18:45

திருமாவளவன் அவர்களே காங்கிரஸை காலிபண்ண திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜியே திமுகவுடன் கூட்டுசேர்ந்தார். அதனால என்ன அவர் திராவிட இயக்கத்தில் சேர்ந்து விட்டாரா. அதே போல் தான் பிஜேபியுடன் அதிமுக கூட்டு ஓடிப் பாசம் எல்லாம் வேண்டாம் சேர்ந்து இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்திருந்தால் 15 பாராளுமன்ற தொகுதிகளை எளிதில் வென்று இருப்பார்கள். அதனால்தான் பிஜேபி உடன் இப்போது கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது திமுகவுக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடாது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஊர் இரண்டு பட திமுகவுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குப் பெட்டியும் சீட்டும் தானே முக்கியம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்டதாம். போலி பாசம் எல்லாம் வேண்டாம்.


HoneyBee
ஆக 28, 2025 18:39

உடைந்த பிளாஸ்டிக் சேர் பார்சல்... ஒரு மூன்று பொட்டிககு இந்த நொண்டி நாடகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை