உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசை அமைப்பாளர் இளையராஜா ஆஜரானார்.தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n36jthjc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவர், சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.நீதிமன்றத்தில், இளையராஜா தரப்பில் வாதாடுகையில், எனக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளது எனத் தெரியாது. சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ கிடையாது. முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால் உலகளாவிய பொருட்கள் பற்றி எனக்கு தெரியாது. பெயர், புகழ், செல்வம் எல்லாம் சினிமா மூலம் கிடைத்தது எனக்கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kantharvan
பிப் 13, 2025 15:35

எது பாவம்? எது புண்ணியம்? பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.உங்கள் மனதில் அச்சமும் குற்ற உணர்வும் ஓங்குகையில் நீங்கள் புத்திசாலித்தனத்தை இழக்கிறீர்கள். மனிதத்தன்மையை இழக்கிறீர்கள். அதைப் பயன்படுத்தி அவர்கள் உங்களை அடக்கி ஆள முனைகிறார்கள்.அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், சமூகம், பெற்றோர் எல்லோருமே இதே தந்திரத்தைக் கையாள்கிறார்கள். இங்கே இசை அமைப்பாளரும் கூட ஒரு பாடல் உருவாவதில் இயக்குனர் , பாடலாசிரியர் ,இசை அமைப்பாளர் என அனைவருக்கும் பங்கு இருக்கும்போது ஒருவர் மட்டுமே உரிமை கோருவது கயவாளித்தனம் இல்லையா??


சிந்தனை
பிப் 13, 2025 14:34

அது ஏன் 109 பட பாடல்கள் மட்டும் மற்ற பாடல்கள் எல்லாம் நீங்கள் மற்றவர்களுடையதை திருடி போட்டதாலா


KavikumarRam
பிப் 13, 2025 14:07

இளையராஜா பாரதத்தில் அதிலும் தமிழகத்தில் பிறந்தது அவர் முற்பிறவில் செய்த பாவம். ஆனால் தமிழர்களுக்கு அவர்கள் முற்பிறவியில் செய்த புண்ணியம்.


Arul Selvan
பிப் 13, 2025 13:16

இசை கடவுள் இளையராஜா. அவரது பாடல்களுக்கு காப்புரிமை கோருவது அவரது உரிமை. இதனை கொச்சை படுத்துவது தவறு.


D Natarajan
பிப் 13, 2025 13:10

வாழ்ஹ நீதித்துறை. 15 ஆண்டுகள் போய்விட்டன. இன்னும் 10 ஆண்டுகள் . உலகத்திலேயே மோசமானது இந்திய நீதித்துறை.


xyzabc
பிப் 13, 2025 12:39

இப்படி தான் எஸ் பி பி சார பாட விடாமல் தடுத்தார். வெட்க கேடு


KavikumarRam
பிப் 13, 2025 14:02

என்ன பிரச்சினை என்றே புரியாத ஒரு தற்குறியுன் உளறல் இது. ஏமாந்தவர் இளையராஜா மட்டுமே. அவரை வைத்து கோடீஸ்வரன் ஆனவர்கள் தான் பல பேர்.


Ramesh Sargam
பிப் 13, 2025 12:20

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவர், சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார். அடுத்த hearing -இன் போதும் அவர் வருவார், சாட்சியங்களை சமர்ப்பிப்பார், காரில் புறப்பட்டு செல்வார். வழக்கு இப்படியே நொண்டும். இதுதான் இன்று நமது நீதிமன்றங்களில் நடக்கும் அவலம். வழக்கு முடிவுக்கு வரவே வராது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை