உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் திறந்து 3 நாட்களில் இடிந்த புதிய கட்டடம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

முதல்வர் திறந்து 3 நாட்களில் இடிந்த புதிய கட்டடம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

தஞ்சை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டடத்தில், மூன்றே நாளில் கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்., அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. தஞ்சாவூரில் ஜூன் 16ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார்.முன்னதாக, முதல்வர் திறப்பதற்கு முந்தைய நாள் இரவு, புதிய கட்டடத்தின் கூரையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அடுத்த நாள் திறப்பு விழா என்பதால், உடனடியாக அவசர கதியில் பெயர்ந்த பூச்சை மீண்டும் பூச்சு வேலை செய்து சீரமைத்தனர்.அதன்பின், ஜூன் 16ல் முதல்வர் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் தளவாடப் பொருட்களை வைப்பதற்காக, அலுவலக கட்டடத்தை ஊழியர்கள் திறந்தனர்.அப்போது, சிமென்ட் பூச்சு மீண்டும் பெயர்ந்து விழுந்திருந்தது. இதனால் உள்ளே செல்ல பயந்து, ஊழியர்கள் நடுங்கினர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இந் நிலையில், கட்டுமான விதிகளை பின்பற்றாத ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி செயற்பொறியாளர் சுமதி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூன் 21, 2025 04:34

சஸ்பெண்ட் செய்து விட்டால்..... கொள்ளையடித்த காசு? பங்கு வாங்கிய குடும்பம்?


Raghavan
ஜூன் 20, 2025 23:07

அந்த கான்ட்ராக்டர் இருவருக்கும் குறைந்தது ஒரு 20% கொடுத்திருப்பார். இதெல்லாம் ஒரு கண் துடைப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இன்னும் ஓரிரு மாதங்களில் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக ஆணை வரும் அவரும் அங்கு சென்று மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்பதுபோல் இரண்டு கைகளாலும் வாங்க ஆரம்பித்துவிடுவார். பிறகு அவர் காட்டில் ஆடிக்காற்று தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை