உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாவட்ட பஸ்கள் கிளாம்பாக்கம் வரை தான்; பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் மாறாது

தென் மாவட்ட பஸ்கள் கிளாம்பாக்கம் வரை தான்; பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் மாறாது

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் பஸ்கள் இனி கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதையடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க துவங்கியுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் நேற்று, கிளாம்பாக்கத்தில் பயணியரை இறக்கிவிட்டன.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகளும், பெங்களூரு நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கும் பேருந்துகளும் வழக்கம்போல், கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படுகின்றன.சென்னை மாநகர பேருந்துகள், நேற்று காலையிலிருந்து சென்னையில் எல்லா பகுதிகளுக்கும், கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகின்றன.ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளை தாண்டி, கூடுதலாக பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகர போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு, 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து, கிளாம்பாக்கத்திலிருந்து, கோயம்பேடு செல்லும்.தாம்பரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து செல்லும், மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து கிண்டி வரை இயக்கப்படும். இந்த வகையில், 1,691 நடைகள் கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.பொங்கலுக்கு பின், அனைத்து வெளியூர் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவை பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் தொகை திருப்பித்தரப்படும்!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், அரசு விரைவு பேருந்துகளின் பயண துாரத்தில், 20 கி.மீ., வரை குறையும்.இது தொடர்பாக, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஏற்கனவே சென்னை கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்துாரில் இருந்து ஏறும் வகையில், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தோர், நேரடியாக கிளாம்பாக்கத்திற்கு வர வேண்டும் என, குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.இணையவழியில் முன்பதிவு செய்தோருக்கு, கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான வித்தியாசத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Srprd
ஜன 01, 2024 19:01

Really difficult situation for people who get down at the new bus terminus. Will they get convenient city buses to go to their residence like what was the case when they were getting down at CMBT ?


Raja Vardhini
ஜன 01, 2024 18:14

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான, தமிழ்நாட்டிற்கு பெருமளவில் பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும் கோயம்புத்தூர், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எந்த திட்டம் போட்டாலும் அது சென்னைக்கே. ஏற்கனவே கோயம்பேடு என்ற பெரிய பேருந்து நிலையம் உள்ள நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் அதைவிட பெரிய பேருந்து நிலையம். மெட்ரோ ரயில். இப்படி சென்னைக்கே எல்லாம். கோவை வெள்ளலூரில் மாபெரும் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. அதை நிறுத்தி விட்டார்கள். பல கோடி செலவு செய்தபின் நிர்கதியாய் நிற்கிறது அந்த கட்டிடம். இப்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களையும் புறக்கணித்து விட்டு சென்னை மட்டுமே முன்னேற வழி வகை செய்து வருகிறார்கள். இதெற்கெல்லாம் என்று விடிவு காலம் வரும்? கோயம்புத்தூரை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைந்தால் எல்லாம் சரியாகி விடுமோ?


அம்பி ஐயர்
ஜன 01, 2024 17:04

அப்போ கோயம்பேடு வரை செல்வதற்கு வசூலித்த கட்டணத்திலிருந்து தற்போது கட்டணத்தினைக் குறைப்பார்களா....??? மினிமம் ரூ. 30/- முதல் 50 வரை குறைக்கப்பட வேண்டும்....


SIVA
ஜன 01, 2024 16:22

கிளம்பாக்கம் அருகில் யாரேனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்து இருக்கலாம் , அவை எல்லாம் விற்ற பின்பு கோடம்பாக்கம் பஸ் நிறுத்தம் மக்கள் வசதிக்காக திரும்ப இங்கேய வரலாம் , அல்லது கோயம்பேடு மார்க்கெட் முன்பு விற்கப்போவதாக செய்தி வந்தது


Kanakala Subbudu
ஜன 01, 2024 15:56

இனி போக்குவரத்து துறை கோவிந்தா. கிளாம்பக்கம் பேருந்து செல்வதும்/வருவதும் கடினம். மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்வது நடக்கும். சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் அதிலே போவார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆகும் வண்டி சத்தத்தை விட வீட்டில் இருந்து கிளாம்பக்கம் செல்ல செலவு அதிகமாக இருக்கும். நகர் பேருந்தில் மூட்டை முடிச்சு எடுத்து வருபவர்களை நடத்துநர் எப்படி நடத்துவார் என்று தெரியும்


Hari
ஜன 01, 2024 14:14

இதுவே கடைசியாக திமுகவின் ஆட்சி இருக்கட்டும் ஒரு நூற்றாண்டை அழித்து கொள்ளை அடித்தது.


sankar
ஜன 01, 2024 13:28

சென்னை நகரத்தில் இருந்து சரியான பேருந்து இல்லை மற்றும் ரயில் வழித்தடங்கள் இல்லை - அதற்குள் அவசரமாய் - ஆட்சி கலைக்கப்போகிறார்கள் என்கிற பயமா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 01, 2024 13:06

அயோத்தியில் மஹரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அமைக்க ₹280 கோடி செலவு. நம்ம ஊருல பஸ் ஸ்டாண்டு கட்ட ₹450 கோடி செலவு. விடியலோ விடியல். யாருக்கு? யாருக்கோ.


பாமரன்
ஜன 01, 2024 15:18

இப்படி கூட சொல்லலாமே... அயோத்தியில் புதிய விமான நிலையத்தை கட்டியதை விட நான்கு செலவு மடங்கு ஆச்சாம் திருச்சி விமான நிலையத்தில் ஒரு முனையம் விரிவாக்கம் செய்ய...???? அட ரெண்டு ஸ்கேலும் வெவ்வேறு... ரெண்டுமே மத்திய அரசின் திட்டம்னு நம்ம பகோடா பாய்ஸ் யோசிப்பாங்களா என்ன...???? உங்களை மாதிரியே தமிழ் நாடு பேரை பார்த்ததும் கரிச்சி கொட்டி காமெடி பண்ணுவாங்கல்ல.


ஆரூர் ரங்
ஜன 01, 2024 10:25

அப்படியே கூவத்தை மணக்க???? வைத்த 50ம் ஆண்டு பொன் விழாவையும் சேர்த்து நடத்தியிருக்கலாம். அங்கு முதலை க்கு MONEYமண்டபமும் எழுப்பியிருக்கலாம்


அப்புசாமி
ஜன 01, 2024 10:08

எல்லோரும்.ரயிலில் போங்கோ..ம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை