வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மறைந்த திரு. எஸ்.பி.பி அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அரசாங்கம் இவ்வாறு செய்திருப்பதில் எவருக்கும் யாதொரு எதிர்ப்பும் இருக்க வாய்ப்பில்லை அரசாங்கம் கூடவே இந்தத் தெருவின் பெயரை ரெவின்யூ ரிக்கார்டுகளிலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, வோட்டர் ஐடி, அந்தப் பகுதியில் இயங்கும் வங்கிகள், கடைகளின் முகவரிகளில் மாற்றம் செய்யும் காரியங்களில் தாங்களாகவே முன்வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து அஞ்சல் அலுவலக மேலாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். அரசாங்க கெஜட்டுகளில் இந்த மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, நீதி மன்றங்களுக்கும் இது பற்றி தெரிவிக்க வேண்டும். இல்லையேனில் பொது மக்கள் ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களுக்கிடையே இதற்காகவும் அலைக்கழிக்கப் படும் நிலைமை ஏற்படும். ஊர்களுக்கும் தெருக்களுக்கும், சந்து பொந்துகளுக்கும் பெயர் மாற்றம் செய்யும் போது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அரசாங்கம் செய்கிறது. ஒரு 10, 20 வருட இடைவெளியில் வீட்டு இலக்கங்களில் மாற்றம் வருகிறது தெருப் பெயர்களில், வார்டு நம்பர்களில், காலனி பெயர்களிலும் கூட அரசியல் காரணங்களுக்காக மாற்றுகிறார்கள். உங்களுடைய சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ, பாஸ்பொர்டுகளைப் புதுப்பிக்கும்போதோ நிறைய பிரச்னைகள் வருகின்றன. ஒவ்வொரு முறையும் ஆதார்கார்டைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது கேஒய்சியை புதிதாக வங்கிகளுக்கு அளிக்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் இனியாவது அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் இனிமேல் ஆகஸ்ட் 15ம் தேதி 1947ல் எந்தப் பெயரகளில் ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தெருக்களின் பெயர்கள் இருந்தனவோ அவை இனியும் மாற்றமில்லாது தொடர வேண்டும்.
சாலைகள் சிலைகள் இவைகளை திறந்து வைப்பதே எங்களின் கலைகள் பிறகு வலைகள் போட்டு தேர்தல் சமயத்தில் மக்களை இழுத்துவிடுவோம்
மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணிய சுவாமிக்குதைப்பூச சிறப்பு பூஜை.
08-Feb-2025