உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதையும் முழுமையா தெரிந்து பேசுங்க விஜய்

எதையும் முழுமையா தெரிந்து பேசுங்க விஜய்

மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரியை குறைத்து அமலுக்கு கொண்டு வந்திருப்பது, மக்களுக்கானது மட்டுமே. 330 மருத்துகளுக்கு ஜி.எஸ்.டி., வரி இல்லாமல் போகிறது. இதற்காக அனைவரும் சேர்ந்து, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். நடிகர் விஜய், அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர், அரசியலை முழுமையாக தெரிந்து பேசினால் நன்றாக இருக்கும். மீனவர்களுக்கான, 'பாலிசி' என்பது, தமிழக மீனவர்களுக்கோ, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கோ வெவ்வேறு கிடையாது. நாடு முழுதும் மீனவர்களுக்கு ஒரே கொள்கை தான் உள்ளது. தமிழக மீனவர்களுக்கான கொள்கை வேறாக இருந்தால், விஜய் வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளலாம். எனவே, அவர் எதையும் நன்றாக அறிந்து கொண்டு, அதன்பின் பேசுவது நல்லது. குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்து, அவர் பேசி வருகிறார்; அரசியலுக்கு முழுதுமாக வரட்டும்; அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் வரும் என்பதை பார்ப்போம். - குஷ்பு, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ