உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிக்கு சிறப்பு விருது

விவசாயிக்கு சிறப்பு விருது

மாநில அளவில், திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு, 'சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது' வழங்கப்படுகிறது. விருதாளருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 5,000 ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை, சேலம் மாவட்டம் பூலாம்பட்டி கிராமம், சின்னப்பில்லுக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகனுக்கு நேற்று குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார். இவர் கடந்த ஆண்டு ஹெக்டேருக்கு, 13,625 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்ததால், விருது வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ