உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்; போக்குவரத்து கழகம் ஆயத்தம்

தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்; போக்குவரத்து கழகம் ஆயத்தம்

திருப்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து இயக்குவதற்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் தேவை என்று அறியப்பட்டுள்ளது.வரும், 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வரும் 28ம் தேதி இரவு முதல் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுதும், கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது இயக்கப்பட்ட பஸ்கள், எந்தெந்த வழித்தடங்கள், பண்டிகைக்கு முதல் நாள் கூட்டம் நிறைந்திருந்ததா, நடப்பாண்டு எந்தெந்த பகுதியில் இருந்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கோட்ட, மண்டல மேலாளர் மூலம் சேகரிக்கப்பட்டு, பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பஸ்களுடன், ஒவ்வொரு டிப்போவிலும் இயங்கும் நிலையில் உள்ள பஸ்களை துாசு தட்டி, பழுதுகளை சரிசெய்து, வரும், 25ம் தேதிக்குள் இயக்கத்துக்கு கொண்டு வரும் ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.''சென்னை தவிர எட்டு கோட்டங்களில் இருந்து, 17 ஆயிரம் பஸ்கள் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கத்துக்கு தேவை. சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு 8,000 முதல், 9,500 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் வெளியூர் செல்ல, வரும் 28 முதல் 30ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், நவ., 1 முதல் 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பஸ் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் சிறப்பு பஸ் இயக்கம் குறித்த விரிவான அறிவிப்பு வெளியாகும்'' என்கின்றனர் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ