உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் அருகே நடக்கும் கொலைகள் தடுக்க டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை

கோர்ட் அருகே நடக்கும் கொலைகள் தடுக்க டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நீதிமன்றங்கள் அருகே, பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரவுடிகளின் எதிரிகளை கண்காணிக்க, மாவட்டம்தோறும் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.சில தினங்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே, மாயாண்டி என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் மீது, கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. போலீஸ் விசாரணையில், பழிக்கு பழியாக இக்கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.இச்சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 275 நீதிமன்றங்களுக்கு, 550 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக ரவுடிகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது, அவர்களின் எதிரிகளால் பழி வாங்கப்படுவது வாடிக்கை தான். கடந்த, 2023ல், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த, சென்னை தாம்பரம் அருகே, இரும்புலியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ், 28, என்பவர், நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொல்லப்பட்டார்.அதே ஆண்டில், திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராக, காரில் சென்ற ரவுடி ஓணான் செந்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுபோன்ற கொலைகளை தடுக்க, மாவட்டம்தோறும் ரவுடிகளின் எதிரிகளை கண்காணிக்க, டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுதும் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரித்து, அவர்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள், அவர்களின் எதிரிகள் யார், பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக, ரவுடிகளின் எதிரி குழுக்களை, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், கண்காணித்து வருகின்றனர். ரவுடிகள் தொடர்பான நீதிமன்ற விசாரணையை கண்காணிக்கவும், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும், உளவுத் துறை போலீசாரும் இணைந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வரும், ரவுடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
டிச 25, 2024 18:30

அதிகாரிங்க முதலில் விஜய் டி.வி சீரியல்களைப் பாக்கணும். நிஜ போலுஸ் மாதிரி சூப்பர் காமெடி ஆக்ஷன் குடுக்குறாங்க.


Nermaiyanavan
டிச 25, 2024 10:59

இந்த விடியல் அரசு அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம்.


Rpalni
டிச 25, 2024 10:49

த்ரவிஷன்கள் ஆட்சிகளில் இது சர்வ சாதாரணம். கூடவே ஆம்புலன்ஸ், நர்ஸ், டாக்டர்களும் இருப்பது நல்லது. அண்ணாமலை தான் நாட்டை காப்பாத்தணும்.


Kasimani Baskaran
டிச 25, 2024 08:02

ஒவ்வொரு ரவுடியாக பேட்டி கண்டு ஒரு தகவல் களஞ்சியம் கூட உருவாக்கலாம். அவர்களின் நடமாட்டங்களை கண்காணித்து நீதிமன்றம் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ளலாம். குடிகாரர்களின் எண்ணிக்கையை குறைக்க பள்ளியிலேயே குடிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற லாஜிக் போன்றதுதான் இதுவும்...


m.arunachalam
டிச 25, 2024 07:50

சரித்திர குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பதை நிறுத்துங்கள் . பலவித நன்மைகள் கிடைக்கும் . காவல்துறைக்கு நேரம் மிச்சமாகும் செலுவும் குறையும் .


பெரிய குத்தூசி
டிச 25, 2024 06:54

அப்போ கோர்ட் லிருந்து கொஞ்ச தூரத்துல வெச்சு கொலை செய்யலாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை