உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக ஒரு விரிவான விவாதத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் சனாதனமயமாக்க பாஜ முயன்று வருகிறது. பாஜவிற்கு உறுதுணையாக தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் உள்ளன. பாஜ தமிழக கட்சிகளுடன் இணைந்து நடமாட தொடங்கிய பின் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது. கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.

தடுப்பு சட்டம்

தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு. ஜாதி, மதத்தின் பெயரால் நடக்கும் ஆணவ கொலைகள் தேசிய அளவில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள் ஆகும்.ஆகவே மத்திய அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்றுவது தான் மிகவும் சரியானது.

கவனத்தில்...!

ஆனால் பாஜ அதில் ஆர்வம் காட்டவில்லை. நெல்லை ஆணவ படுகொலையை கண்டித்து பாஜ, ஆர்எஸ்எஸ் பேசவில்லை. ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று காத்திருக்காமல், மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்திற்கான சட்டத்தை நிறைவேற்றி பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

65 லட்சம் பேர்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கூட மத்திய அரசு தயாராக இல்லை. 2003ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்தவர்கள் குடியுரிமை ஆவணங்களை சமர்பிக்க தேர்தல் கமிஷன் சொல்கிறது. பீஹாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஜனநாயக நடவடிக்கை

ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை தேர்தல் கமிஷன் மூலம் மோடி அரசு மேற்கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது. இது தமிழகத்துக்கான நடவடிக்கையையும் விரைவில் மாறும். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இதனை நடைமுறைக்கு கொண்டு வர தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

வட மாநிலத்தை சேர்ந்த 80 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். அவர்களை எல்லாம் இங்கே வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியும் அவர்களது செயல்திட்டத்தில் இருப்பதாக சொல்லபடுகிறது. எனவே இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு விரிவான விவாதத்தை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Thravisham
ஆக 04, 2025 07:00

கான்டீன் போண்டா வடைக்கு ஆசைப்பட்டு அதக்கொரு மீட்டிங்


மோகன்
ஆக 04, 2025 00:11

திருமா என்ன சொல்றாருன்னா, இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் வந்தா நாங்க எப்படி கள்ள ஓட்டு போடுறது.


Venkatesan Srinivasan
ஆக 03, 2025 20:11

எல்லோர் கையிலும் கைபேசி உள்ளது. எல்லா வணிக செயல்பாடுகள் ஓடிபி மூலம் நடைபெறுகிறது. ஆதார் வங்கி கணக்குகள் பான் கார்டு உள்ளிட்டவை கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலான சமயங்களில் கைபேசி எந்த மாநிலத்தில் எந்த ஊரில் எந்த பகுதியில் உள்ள சேவை வலை தளத்தில் உள்ளது என்று கணக்கிட்டு வாக்காளர் பட்டியலில் அந்த ஊருக்கு மாற்றம் செய்துவிடலாம்.


c.mohanraj raj
ஆக 03, 2025 20:10

தகுதி உள்ளவர்களுக்கு வாக்குரிமை அளிக்கிறார்கள். கள்ள ஓட்டு போட மாட்டேன் என்று இவர் உறுதியாக சொல்ல முடியுமா


Kulandai kannan
ஆக 03, 2025 20:09

தமிழக அரசியல்வாதிகளின் இரட்டை வேடங்கள். 1. வெளி நாட்டவருக்கும் பீகாரில் ஓட்டுரிமை வேண்டும். ஆனால் வடநாட்டு இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இருக்கக் கூடாது. 2. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். ஆனால் கர்நாடக அணைகளில் நீர் குறைவாக சேகரிக்க வேண்டும். 3. தமிழகத்தில் இட ஒதுக்கீடு வேண்டும். ஆனால் இலங்கையில் அது போன்ற சலுகை பெரும்பான்மை சிங்களருக்கு வழங்கக் கூடாது. 4. இலங்கை தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும். ஆனால் பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை கூடாது. List is endless.


saravan
ஆக 03, 2025 19:16

இறந்தவர்களை நீக்காமல் என்ன செய்வது இந்திய குடிமகன் குடியுரிமை சான்றிதழ் அடிப்படையில் தான் இருக்கும் எந்த மாநிலத்திலும் வாக்களிக்கலாம் திருமா தமிழன் இல்லை என்று கூட ஏர்போர்ட் மூர்த்தி ஒரு மேடையில் பிறர் கூறியதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் உடனே இவரை நீக்கிவிட முடியுமா ஆதாரம் அவ்வளவுதான்


கூத்தாடி வாக்கியம்
ஆக 03, 2025 19:09

ஓசி பிரியாணி டப்பா டான்ஸ் ஆடுகிறதா


Subramanian Marappan
ஆக 03, 2025 18:55

தமிழ்நாட்டில் பூர்வகுடி தமிழர்கள் மட்டுமே வசிக்க வேண்டும். மற்றவர்கள் அவர்கள் சொந்த மாநிலம் அல்லது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற சட்டம் கொண்டு வாருங்கள். அப்பொழுது தான் தமிழர்கள் அல்லாதோர் அரசியல் பதவிகளிலும் அரசு பதவிகளிலும் அமர முடியாது.


பேசும் தமிழன்
ஆக 03, 2025 18:47

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிறேன் பே‌ர்வழி என்று கட்சி நடத்தும் இவர் .... வேங்கை வயல் ஊரில் குடிக்கும் நேரில் ம.... கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எப்போதாவது பேசியது உண்டா ???.... கண்டிப்பாக இங்கேயும் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு நடத்த வேண்டும்....அப்போது தானே இவர்கள் எத்தனை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்களுக்களை ஓட்டு பட்டியலில் சேர்த்து இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வரும் !!!


சிட்டுக்குருவி
ஆக 03, 2025 18:23

இந்திய பிரஜைகள் எங்கு வாழ்கின்றார்களோ அங்கு வாக்களிக்கும் முறைதான் சரியானது .அதற்கேற்றாற்போல் சட்டங்களையும் இயற்றி நடைமுறைப்படுத்தவேண்டும் .


சமீபத்திய செய்தி