உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு

நவ.,5ல் சிறப்பு தவெக பொதுக்குழு கூட்டம்: விஜய் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uwcuhkku&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த அமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு. நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும்கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை. அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான் நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி வரும் நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை அன்று. நம் தமிழக வேற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பிரேம்ஜி
அக் 30, 2025 07:26

மாமல்லபுரம் என்ன ஸ்பெஷல்? எல்லா கட்சியும் அங்கேயே கூட்டம் போடுகிறார்கள்? கூவத்தூரில் இன்னும் பெட்டர்! டான்ஸ், உற்சாக பானம் , பாட்டு என்று தூள் பரத்தலாமே!


பிரேம்ஜி
அக் 30, 2025 07:21

பொதுக்குழு என்றால் என்ன? எதற்கு? ஒரு பத்து லட்சம் பேர் கூடி முடிவு எடுப்பார்களா?


Arachi
அக் 29, 2025 22:38

அடிச்சி சொல்லலாம் இவர் முழுமையான அரசியலை வாதி அல்ல தலைமைப்பண்புக்கு தகுதியற்றவர் . சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு ஓடி ஒழியக்குடியவர் மொத்தத்தில் அரைவேக்காடு.அத்தனை இடத்திலும் டெபாசிட் இழப்பர்


David DS
அக் 29, 2025 22:27

விஜய் கூட்டத்துக்கு தான் இனி யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சா அவரை பத்தின நியூஸ் ல கமெண்ட் போட கூட ஆளு இருக்காது போல


சந்திரன்
அக் 29, 2025 21:02

எனக்கென்னவோ மறைந்த சனியன் சகடை கேரக்டரில் சிறப்பாக நடித்த மறைந்த கோட்டா சீனிவாசன் இப்போது நினைவில் வந்து, வந்து போகிறார். பாவம் அவர் திரைப்படத்தில் மட்டும்தான் சனியன் சகடை ஆனால் நிஜத்தில்? . யாரும் தவறாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.


சோழநாடன்
அக் 29, 2025 20:55

கரூர் செல்ல மண்டபம் கொடுக்காமல் திமுக சதி செய்கிறது என்று ஒப்பாரி வைத்த மகா நடிகருக்கு ஆறுதல் சொல்லவும், ஆறுதல் பெறவும் மகாபலிபுரத்தில் மட்டும் அரசு எப்படி கொடுக்கச் சொல்லியிருக்கும். இப்போது பொதுக்குழுவுக்கும் மண்டபம் கிடைத்துவிட்டது என்றால் திமுக நடிகர் விஜய்-ஐ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் புரிந்துகொள்ளமுடியும்.


தமிழ்வேள்
அக் 29, 2025 20:16

சாவு விழுந்த ஒற்றை வீட்டு ஆட்களே, குறிப்பிட்ட நாட்கள் வரை எந்த நிகழ்விலும் பிற இடங்களில் அந்த கேதம் தொடர்பான நிகழ்வுகளை கூட இயன்ற வரை தவிர்ப்பது வழக்கம்...கரிக்கால், கரிக்கை அதாவது கருமம் செய்தவர்கள் என்பதால்...விபரீத பின்விளைவுகளை தவிர்க்கவும் கூட.. ஆனால் இந்த சோசப்பு 41 கருமாதி கர்மங்களை செய்தவர்களை ஒரே இடத்தில் கூட்டி கும்மியடித்து இருக்கிறது...என்ன சொல்ல? வில்லங்கம் நிகழாமல் இருக்க வேண்டும்....


viki raman
அக் 29, 2025 19:32

isi தர சான்றிதழ் பெற்ற அக்மார்க் அரசியல்வேதி வாரேனுங்கோ


நிவேதா
அக் 29, 2025 19:07

நமது நயினாரையும் சேர்த்துக்குங்க. விஜயை விட அவர் தான் ஒரு மாதமாக கரூர் சம்பவத்துக்காக உருண்டு பிரண்டு அழுகிறார்


Nagarajan D
அக் 29, 2025 20:02

அவரை சேர்த்து கொள்ளலாம் இதுவரை அழுத்ததற்காக... இனிமேல் அழப் போகும் ராமசாமி கூட்டத்தை என்ன செய்யலாம்... நேற்று துணை ஜனாதிபதி கான்வாய் செல்லும் சாலையிலே ஒரு புள்ளிங்கோ ஹெல்மெட் கூட இல்லாமல் அனுமதித்த போலீசுக்கும் அந்த துறைக்கும் கிடைக்க உள்ள வசவுகளுக்கும் சேர்த்து அழப்போகிறார்......


Anand
அக் 29, 2025 19:04

இவர் வேற...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை