உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்

விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்

சென்னை : தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், 31ம் தேதி வரை நடைபெறும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம், 11 வகையான தடுப்பூசிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் வரை, 11,000க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன. இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், வாரத்திற்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இந்நிலையில், முதல் தவணைக்குப் பின், அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை. இதனால், 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்படுவதில்லை.இந்தாண்டு முடிவடையவுள்ள நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை, பொது சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. இதில், பாக்டீரியா வாயிலாக பரவும் நிமோனியா மூளைக் காய்ச்சல், சீழ் பிடித்த மூட்டுவலி, தொண்டை ஜவ்வு வீக்கம் உள்ளிட்ட, ஐந்து வகையான நோய்களில் இருந்து குழந்தையை பாதுகாக்க, பென்டாவலன்ட் தடுப்பூசி போடும் முகாம், வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:குழந்தை பிறந்து 4, 10, 14வது வாரங்களில், பென்டாவலன்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசியை செலுத்த தவறியவர்களுக்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 31ம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதில், பென்டாலவலன்ட் தடுப்பூசி மட்டுமின்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும், குழந்தைகள் போட்டுக்கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும். இதன் வாயிலாக, குழந்தைகளுக்கான பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை