உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு, அமைச்சர் துரைமுருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.அண்மையில், தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், ''தமிழகத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒரே அணியில் சேரும். ...... போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என பேசியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zzzgi91y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வாறு பேசுகையில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இதற்கு கடும் கண்டனம் வலுத்து வந்தது.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தன் பேச்சுக்கு அமைச்சர் துரை முருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணாநிதி கருணை உள்ளத்தோடு 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். கட்சி தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இந்த தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எந்த அளவுக்கு வருந்தியிருப்பார் என்பது எனக்கு தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.பெண்கள் குறித்து பொன்முடியின் அவதூறு பேச்சு காரணமாக, கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு இன்று துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kulandai kannan
ஏப் 11, 2025 22:53

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் அவருக்கு எதிரே இந்த துரைமுருகன் உட்கார்ந்த பழைய ஃபோட்டோக்களைப் பார்த்தாலே இவர் எவ்வளவு மட்டரகமானவர் என்பது தெரியும்.


sankaranarayanan
ஏப் 11, 2025 21:12

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் பிறகு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டார் என்றால் அது யாருக்கு தேவை பொன்முடி துரைமுருகன் இரு அமைச்சர்களையும் அமைச்சரவையிலிருந்து உடனே நீக்க வேண்டும் இல்லையேல் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் இருவரையும் தகுதி அற்றவர்கள் என்றே நீதிமன்றம் செல்வார்கள்


Yaro Oruvan
ஏப் 11, 2025 20:52

நெக்ஸ்ட் கோல்ட் ஹேர்


Ganeshan R
ஏப் 11, 2025 18:41

துரை, பொன்முடி, ராசா போன்ற நீங்கள் எல்லோரும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் அல்லவா ... இப்படித்தான் பேசுவீர்கள்... உங்களையும் நம்பி வாக்களிக்கும் மக்களின் நிலை தான் பரிதாபம்...


HoneyBee
ஏப் 11, 2025 16:48

அடுத்து ரோமம் மன்னிப்பு கேட்டு பின்னர் சேர்த்து கொள்ள படுவான்... இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்


PALANIAPPAN
ஏப் 11, 2025 14:14

வருத்தம் தெரிவிக்கிலையின்னா பதவி போயிரும். தேர்தல் வருதில்ல


Sankare Eswar
ஏப் 11, 2025 13:42

புடிச்சு உள்ள போடுங்கய்யா


sridhar
ஏப் 11, 2025 13:19

- பத்து நாள் கழித்து வருத்தம் தெரிவிக்கிறேன் .


rama adhavan
ஏப் 11, 2025 12:33

தென்னை மரத்துக்கு பொன்முடிக்கு தேள் கொட்டியவுடன் பதவி பறிப்பு பனை மரத்துக்கு துரை முருகனுக்கு வலித்து மன்னிப்பு வருகிறது. பொன்முடி ஆணையில் ஸ்டாலின் நேராக கையொப்பம் இட்டதால் இவர் விரைவில் டம்மி ஆக்கப் படுவார் என நம்பலாம்.


ravi subramanian
ஏப் 11, 2025 12:29

What about removing him from the general secretary post?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை