உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தி, வாரணாசிக்கு ஆன்மிக சிறப்பு ரயில்

அயோத்தி, வாரணாசிக்கு ஆன்மிக சிறப்பு ரயில்

சென்னை:மகாளய அமாவாசையை ஒட்டி, மதுரையில் இருந்து சென்னை வழியாக, அயோத்தி மற்றும் வாரணாசிக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர், 9ல் புறப்படும் ரயில், சென்னை எழும்பூர் வழியாக செல்லும். இதில் பயணிப்போர், வடமாநிலங்களில் உள்ள, மஹாகாளேஸ்வர், ஓம்காரேஸ்வர், அலோபி தேவி, சரயூ ஆரத்தி தரிசனம், பிருந்தாவனம், பாங்கே பிஹாரி, ராமஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி, திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், காசி விஸ்வநாதர் தரிசனம், காசி விசாலாட்சி தரிசனம், அன்னபூரணி தரிசனம், கங்கை ஆரத்தி வழிபாடு மற்றும் விஷ்ணு பாதம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 நாட்கள் கொண்ட, ஆன்மிக சுற்றுலாவில், ஒருவருக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 30,250 ரூபாய், மூன்றாம் வகுப்பு 'ஏசி' 45,750 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல்களை பெற, 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி