உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக, 2018 --- 2020 வரை ராமேஸ்வரம் முதல் நாகை வரை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின், 74 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.இப்படகுகளை 2022ல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி நீதிமன்றங்கள் அரசுடைமையாக்கின.இப்படகுகள் சேதம் அடைந்து, இலங்கை கடற்கரையில் கிடக்கும் நிலையில், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை நடுக்கடலில் இப்படகுகளை மூழ்கடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இதனால், எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களின் வலைகள், மூழ்கடித்த படகுகளில் சிக்கி சேதமடையும் அபாயம் உள்ளது.ஏற்கனவே, இதேபோன்று மீனவர் வலைகளை சேதப்படுத்த, கடந்த 2019ல், சேதமடைந்த 15 பஸ்களை, காங்கேசன்துறையில் இருந்து நடுக்கடலில் போட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இந்த முடிவை தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஏப் 05, 2025 17:07

மித்ர விபூஷனா வாழ்க வாழ்க.


venugopal s
ஏப் 05, 2025 13:15

பிரதமர் மோடி அவர்களின் இலங்கை பயணம் வெற்றி பெற்று விட்டது!


N Annamalai
ஏப் 05, 2025 09:32

ஒரு முடிவும் எட்டப்படாது .வெளியுறவுத்துறையுடன் ,தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் சட்டமன்ற குழுவுடன் சரியான ஆட்களுடன் இலங்கை சென்று பேச வேண்டும் .நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் .வாழ்வா சாவா என்று எவ்வளவு நாள் வாழ்வது .


தமிழ்வேள்
ஏப் 05, 2025 09:27

திருட்டு திராவிட கும்பல் அண்ணாதுரை கருணாநிதி வகையறா சொல்வதையெல்லாம் கேட்டு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கஞ்சா கடத்தல் வேலை பார்த்தால் சுடாமல் என்ன யானை வைத்து மாலை போட்டு மரியாதை செய்வார்களா? இந்தியாவின் பல மொழிவழி இனங்களில் தமிழனும் ஒருவனே.. ஸ்பெஷல் தகுதி சலுகை எல்லாம் நஹி....


Sampath Kumar
ஏப் 05, 2025 08:35

இது தாண்ட சிங்களன் ஸ்டைலு அதுக்கு கொம்பு சீவும் இந்திய அரசு இவர்கள் எல்லாம் இந்திய மீனவர்கள் இல்லை போல ஸ்ரீலங்கா மீனவர்கள் எல்லை தாண்டுவது இல்லையாம் அறிவு கொழுந்துகளை சொல்லுது அவன் தமிழ் பகுதியில் மீன் புடிக்க மாட்டான் அவன் அவன் நாட்டின் தெற்கு புறம் தான் பிடிப்பான் இதுக்கு ஆண்ட கட்ச தீவை மீட்க வேண்டும் என்கிறது அரசு அதுக்கு தேர்தல் ஸ்டண்ட் அப்புறம் இன்னும் பிறக்கருத்துகள்


vivek
ஏப் 05, 2025 10:15

மகன் வாங்கட்டும் சம்பத்து


Natarajan Ramanathan
ஏப் 05, 2025 07:48

நல்ல முடிவு. எல்லைதாண்டி சென்றால் அதற்கு விலை கொடுத்துதான் ஆகவேண்டும்.


Neelachandran
ஏப் 05, 2025 21:28

இந்தியத் தமிழனே நமது மீனவர்களுக்கு எதிரான கருத்தைச் சொல்லலாமா?.வாழ்க்கைப்பாடுகளை மனதில் கொள்ளுங்கள்


Arul. K
ஏப் 05, 2025 07:28

முட்டாள்தனத்திற்கு அளவில்லையா. அந்த படகுகளை மீனவர்களுக்கு திரும்ப கொடுத்தாலும் பயன்படுத்தும் நிலையில் இருக்காது. கடலில் போட்டு கடலை மாசுபடுத்துவதற்கு பதிலாக பழைய இரும்பு கடையில் போட்டு ...


Kasimani Baskaran
ஏப் 05, 2025 07:11

மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவம் சுடுவதில்லை... மீனவர்கள் படகுகளை மீட்கப்போனால் கண்டிப்பாக சுடவும் செய்வார்கள்..


சூரியா
ஏப் 05, 2025 06:42

சரியான முடிவு. ஒரு முறையேனும் சிங்கள மீனவர்கள் இந்திய எல்லையில் பிடிபட்டதாக செய்தி உண்டா? நம்மவர்களுக்கு பேராசை அனுபவிக்கட்டும்.


Neelachandran
ஏப் 05, 2025 21:23

மித்ர விபூஷணுக்கு செய்யும் மரியாதை இதுதானா?வக்கிரமான முடிவு.லட்சக்கணக்கான அகதிகளை எத்தனையோ காலமாக பராமரிக்கிறோம்.அதற்கான நன்றி இதுதானா?


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 06:35

திராவிட கண்மணிகள் இலங்கைக்கு சென்று படகுகளை மீட்டு வர முதல்வர் ஆணையிட வேண்டும் மோடிக்கு லெட்டர் எழுதி ஒன்னும் ஆகப்போவதில்லை


Yes your honor
ஏப் 05, 2025 08:53

ஆமாம், அதுதான் சரி. உடனே உதயநிதி, மகேஷ், சேகர் பாபு மூவரும் இலங்கை செல்ல வேண்டும். இவர்கள் உருட்டும் உருட்டலில் இலங்கை அரசும், நீதிமன்றமும் குழம்பி மெண்டலாகி விடுவார்கள். பிறகு நமது மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை