மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது
09-Oct-2025
தஞ்சாவூர்: தவறுதலாக எல்லை கடந்த மூன்று மீனவர்கள் விடுதலை செய்து படகுடன் பாதுகாப்பாக அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேரந்த பாயிஸ்அக்ரம் என்பவருக்கு சொ்நதமான நாட்டுபடகில், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேர்ந்த முரளி,30, ராமநாதபுரத்தை சேர்ந்த குமார்,32, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த ராஜா,53, ஆகியோர், நாட்டுபடகில், மீன்படிக்க சென்ற போது, கடந்த அக்.16ம் தேதி, படகில் இன்ஜின் பழுதானதால், திசைமாறி இலங்கை கடல் எல்லையான, யாழ்பாணம் மாவட்டம் அனலைத்தீவுக்கு, மீனவர்கள் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று மீனவர்கள் தவறுதலாக வந்ததாகவும், அவர்களையும், அவர்களின் படகையும் பத்திரமாக, சர்வதேச கடல் எல்லை வரை கொண்டு விட்டு வர இலங்கை கடற்படையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தகவல்களை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறியதாவது: இலங்கை கடற்படையினரிடம் பேசி, மீனவர்களை மீட்க பலமுயற்சிகள் செய்யப்பட்டது. மீனவர்களின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் கரை ஒதுங்கினார்கள் என்பதை நீதிமன்றத்தில் எடுத்து கூறப்பட்டது. இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களிடம் படகுகளை பறிமுதல் செய்துக்கொள்ளப்படும். ஆனால், முதல் முறையாக படகையும், மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் பத்திரமாக சர்வதேச எல்லலை வரை கொண்டு வந்து விட இலங்கை கடற்படையினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
09-Oct-2025