உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி குறித்து அவதுாறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது

உதயநிதி குறித்து அவதுாறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது

சென்னை: மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார். அதில், கூறியிருந்ததாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xyptstas&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என்னது பதற்றத்தில் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். உதயநிதி மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார். நீங்கள் என்னடான்னா, இரண்டு சீட்டுக்கு பிளாஸ்டிக் சேர்ல உட்கார்ந்து, கைகட்டி, வாய் பொத்தி இருந்துட்டு, அரசியலுக்காக சனாதனத்தை இழுப்பது கேவலமாக இல்லையா. சும்மா அடங்க மறு, அத்துமீறு என்று சொன்னால் பத்தாது. ஆண்மகனாக இருந்தால் அதைச் செயல்படுத்த வேண்டும்.உங்கள் கட்சி அழுத்தத்திற்கு ஆளாகி விட்டு, சனாதனத்தை குடைய பார்த்தால், பிறகு உதயநிதிக்கு கோபம் வந்து, அடுத்த தேர்தலில், ஒரு சீட் தான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்; யோசித்து எழுத வேண்டும்.உதயநிதி வெளியில் வேண்டுமானால் எதிர்ப்பது போல செய்யலாம். உண்மையில் அவர் சனாதனத்தின் பக்கம் தான் தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர்.இன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கராஜனை 14 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 197 )

BALACHANDRAN
டிச 26, 2024 09:33

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த ரெங்கராஜன் அவர்களை ரிமைண்ட் பண்ணும்போது ஜட்ஜஸ் எதற்கெல்லாம் தண்டனை கொடுக்கலாம் எதற்கெல்லாம் தள்ளுபடி பண்ணலாம் என்று ஏதாவது சட்டத்தில் இடம் இருக்கிறதா தயவு செய்து பகிரவும் நன்றி


vbs manian
டிச 24, 2024 10:00

கலியுகம் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரமணா மகரிஷியே கோர்ட்டில் ஆஜரானார்.


Dharmavaan
டிச 21, 2024 20:17

நீ தித்துறை ஏன் இதை ஏற்றது ....இவர் கொலை குற்றவாளியா ...


M Ramachandran
டிச 21, 2024 12:15

கேவலமானா அரசியல் மக்களும் அதே மாதிரி இங்கு.


Dharmavaan
டிச 19, 2024 08:39

இன்னும் யாரும் பெயில் நகர்த்தவில்லையா .கேவலமான நீதி


Bala
டிச 19, 2024 03:53

இதுவும் ஒரு உண்மையான ப்ராஹ்மண அவமதிப்புதான். இதுக்கும் ஒரு பிராயச்சித்த பூஜை வேறு சில ப்ரஹ்மணோத்தமர்களை வைத்து துணை மு ரகசியமாக நடத்திக்கொள்ளலாம்


Ramesh Sargam
டிச 18, 2024 20:00

எந்த ஜீயர் சார்பில், யார் நடவடிக்கை எடுக்க சொன்னது? அந்த உதய நிதி, பாரத பிரதமர் மோடிஜி மீது எவ்வளவு முறை அவதூறு பேசி இருப்பார். அவர் மீது இதுவரை ஏன் யாரும் நடவடிக்கை எடுக்கச்சொல்லவில்லை?


திண்டுக்கல் சரவணன்
டிச 18, 2024 11:12

இதுங்க தான் கருத்து சுதந்திரம் பற்றி பக்கம் பக்கமா பேசியது. இப்ப எவன் வாய திறந்தாலும் கைதுதான். உப்பு சப்பு இல்லாத கேஸுக்கு நீதிமன்றம் ஏன் கைது செய்ய அனுமதி கொடுக்கிறது. இதுல bail is a norm and arrest is exception என்ற டயலாக் வேற.


S.V.Srinivasan
டிச 18, 2024 08:18

இதுக்கு பேர்தாண்ட சர்வாதிகாரி ஆட்சி. இவனுகளோட யோக்கியதைகளை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்கூடாது. உருப்பட மாட்டீங்கடா. 2026இல் கட்சிக்கு மெரினா கடற்கரையில் சமாதிதான்


Dharmavaan
டிச 18, 2024 07:17

எந்த ஜீயர், எதனை ஜீயர்கள் எதிர்த்தார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை