உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''புதுமைப்பெண், காலைஉணவுத் திட்டம் போன்ற தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளது, '' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.தமிழக நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், பயனாளிகளுக்கு 712 குடியிருப்புகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய, தென் சென்னை வளர்ந்ததை போல், வட சென்னை வளர்க்கவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டு உள்ளது. இப்பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி அறிவிக்கப்பட்டது. இதனை ரூ.6,400 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.90 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளன. தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தேர்தல் நேரத்தில் சொல்லாத புதுமைப்பெண் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். இதனால் பயனடைந்த பெண்கள் என்னை அப்பா என அழைக்கின்றனர். அதேபோல், தேர்தல் நேரத்தில் சொல்லப்படாத காலை உணவுத் திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

நிக்கோல்தாம்சன்
பிப் 20, 2025 05:58

முதன்மையான திட்டம் பாலியல் திட்டம் , இரண்டாவது மெத்து , சூடோ கடத்தல் திட்டம்


மோகன சுந்தரம் லண்டன்
பிப் 19, 2025 23:52

அப்பா அப்பப்பா. என்ன கொடுமை அப்பா.


nb
பிப் 19, 2025 19:09

மொதல்ல சிலிண்டர்க்கு 100 ரூபாய குடுங்க


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 19, 2025 18:17

சொல்லாத திட்டங்களில் முதன்மையானது ஜி ஸ்கொயர் நில அபகரிப்பு திட்டம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 19, 2025 18:16

அப்பா, அப்பா என்று இந்த ஆளு திடீரென்று அடிக்கடி கூவுவதைப் பார்க்கும் போது,வடிவேலு ஒரு படத்தில் சுடுகாட்டில் எரிந்த பிணத்தின் சாம்பலை முகத்தில் பூசியபடி அப்பா... அப்பா... என்று அழும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது.


V RAMASWAMY
பிப் 19, 2025 17:45

இந்து கோயில்களை உடைப்பது, அந்தணர்களை கேவலமாக நடத்துவது, இந்து எதிர்ப்பு, ஒரு சில மதத்தவர்களை மட்டும் தலை மேல் வைத்து கொண்டாடுவது போன்றவையா?


M Ramachandran
பிப் 19, 2025 17:31

வாச்சாங்குளி புழுகினி


enkeyem
பிப் 19, 2025 16:46

இப்போ கொடுத்த வாக்குறுதிகளைவிட சொல்லாத திட்டங்கள்தான், கள்ளச்சாராயம் பாலியல் வன்கொடுமை தவுகளை தட்டி கேட்பவர்களை கைது எய்து மிரட்டுவது விலைவாசி உயர்வு எல்லாமே சொல்லாத திட்டங்கள்தான்


Ganapathi Subramanian Vairavan
பிப் 19, 2025 14:58

ஐயா உங்க திராவிட மாடல் ஆட்சி சாதனைனு இந்த லிஸ்ட்ல உள்ளதையும் சேர்த்துக்கோங்க படு கொலை கொள்ளை உங்க கட்சி காரங்க தனி பாலியல் வன் புணர்வு உங்க கட்சி காரங்க கூட்டு பாலியல் வன் புணர்வு கஞ்சா சப்ளை அப்புறமா உங்க மட்டமான மொழி அரசியல் சொல்ல மறந்துட்டேன் ,உங்களக்கு அப்பா ங்கிற திட்டமும் நிறைவேற்றம்


தமிழ் மைந்தன்
பிப் 19, 2025 13:55

புலியை பார்த்து பூனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை