உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை அவரது வீட்டில் சந்தித்தார். அங்கு இரவு உணவு சாப்பிட்டார்.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி உள்ளார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் அழகிரி சார்பில் அவரது மகன் தயாநிதி பங்கேற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=790chek9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் பிறகு மதுரை வந்த போதெல்லாம் அழகிரியை சந்திப்பதை தவிர்த்தார் ஸ்டாலின். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையிலிருந்த தயாநிதியை பார்க்க சென்ற போது அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.இந்நிலையில் மதுரையில் இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்க ஸ்டாலின் நேற்று வந்தார். ஸ்டாலினை சில நாட்களுக்கு முன் அலைபேசியில் தொடர்பு கொண்ட அழகிரி டி.வி.எஸ்.நகரிலுள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.நேற்றிரவு ரோடு ஷோ, மதுரை முதல் மேயர் முத்து சிலை திறப்பு விழாவை முடிந்து கொண்டு, பந்தல்குடி கால்வாயை ஆய்வு செய்த பின் சர்க்கியூட் ஹவுஸ் சென்றார் ஸ்டாலின்.பின் அங்கிருந்து தேசிய கொடி இல்லாத தனி காரில் உதவியாளர் மற்றும் ஒரு பாதுகாவலருடன் புறப்பட்டு இரவு 9:57 மணிக்கு அழகிரி வீட்டிற்கு சென்றார். அவரை அழகிரி கட்டி தழுவி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அழகிரி வீட்டில் இரவு உணவு சுவீட், இடியாப்பம், இட்லி ஸ்டாலின் சாப்பிட்டார். பிறகு அழகிரி, அவரது மனைவி காந்தி, அவரது ஆதரவாளர்கள் மன்னன், உதயகுமார், எம்.எல்.ராஜ், கோபி, முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா ஆகியோர் முதல்வருடன் போட்டோ எடுத்து கொண்டனர். பிறகு அழகிரியும், ஸ்டாலினும் சிறிது நேரம் தனியாக பேசி கொண்டிருந்தனர். இரவு 10:25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலினை அழகிரி வெளியே வந்து வழியனுப்பி வைத்தார்.அழகிரி ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ''அண்ணனும் தம்பியும் சந்தித்தில் மகிழ்ச்சி. இவரும் குடும்ப உறவு குறித்து பேசி இருக்கலாம். இனி நல்ல காலம் தான்,'' என்றார். இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து அழகிரி தான் முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.P.Anand
ஜூன் 03, 2025 09:36

நெஞ்சம் இனித்தது வாய் புளித்தது நாடு நாசமானது


Rajasekar Jayaraman
ஜூன் 01, 2025 21:33

ஏமாற்றுக்காரர்கள் திருடர்கள் சூடு சொரணை அற்றவர்கள்.


பல்லவி
ஜூன் 01, 2025 18:22

எல்லா நற்குணங்களும் அவர் உள்ளத்தில் இருந்து உறுத்தும் என்று நினைக்கிறேன்


சதீஷ்
ஜூன் 01, 2025 12:36

ஜனக்ராஜ் மாதிரி எல்லோரும் சேந்து நல்லா சாப்புடுங்கோ


lasica
ஜூன் 01, 2025 05:20

தயாநிதிக்கு ஒரு மலர் வளையம் வைத்து அட்வான்ஸ் இரங்கல் ஒல்லியிருக்கலாம். டோப்பா மண்டையனுக்கு ஆதரவு அளித்ததற்காக தன சொந்த கட்சியை சேர்ந்த தா. கிருஷ்ணனை ஆள் வைத்து கொலை செய்தவன் இந்த அழகிரி. தினகரன் ஆஃபிஸில் மூன்று பேரை உயிரோடு கொளுத்தியவன். காவல் சும்மாவிடாது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2025 04:11

இதயம் இனித்தது கண்கள் பனித்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை