உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்

மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்

ராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். தந்தை செய்த தவறை மறைத்து விட்டு, மகன் தற்போது ராமநாதபுரம் சென்று, மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். காங்., - தி.மு.க., இரு கட்சிகளும் செய்துள்ள துரோகத்திற்கு, தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றும் காங்., உடன் கூட்டணி வைத்து குலாவி கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, மீனவர்களின் நலன் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கச்சத்தீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பா.ஜ., அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும். கரூரில் அப்பாவி மக்கள் பலியான விவகாரத்திலும், பா.ஜ.,வை கேள்வி கேட்க, முதல்வருக்கு தார்மீக உரிமை இல்லை. சொந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்னை பற்றி பேசுவது வேடிக்கை. - எல்.முருகன், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
அக் 04, 2025 15:20

இவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது கழகத்தின் 21பக்க பிள்ளைகளே


vetri
அக் 04, 2025 14:15

கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்கள் பிரச்னையை அடுத்தவர்கள் மீது திணிப்பதை விட்டு விட்டு, கட்சத்தீவை மீட்டு நடவடிக்கை எடுக்கலாமே... அடுத்தவர்களை குறை சொல்லியே ஆட்சி நடத்துவது சரியல்ல... மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடக்கவில்லை... .மோடி ஆட்சி தான் நடக்கிறது... கட்சத்தீவை மீட்டாலே தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்படும்... அதை விடுத்து நடக்காததை பேசி பலன் இல்லை. காஸ் சிலிண்டர் விலையை குறைத்து பாமர மக்களிடம் பாராட்டை வாங்கலாமே...


J. Vensuslaus
அக் 04, 2025 12:36

இவர் வேற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை