உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் பாணியில் கள ஆய்வு திருவள்ளூரில் உதயநிதி துவக்கம்

ஸ்டாலின் பாணியில் கள ஆய்வு திருவள்ளூரில் உதயநிதி துவக்கம்

சென்னை: மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தது போல, துணை முதல்வர் உதயநிதியும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் செல்கிறார்.கடந்த ஆண்டு, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற திட்டத்தை துவக்கிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மண்டலத்திற்கும் நேரடியாக சென்றார். அந்த மண்டலத்தில், ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தங்கி, அந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள், சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார்.முதல்வருக்கு முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று, வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து, முதல்வருக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்துவார்.இதே பாணியில், துணை முதல்வர் உதயநிதி, மாவட்ட வாரியாக ஆய்வுக்கு செல்ல உள்ளார். வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் செல்கிறார். அங்கு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஆய்வுக்கு செல்வதையொட்டி, அரசு துணை செயலர் பிரதாப் தலைமையில், நான்கு அலுவலர்கள் நாளை திருவள்ளூர் செல்கின்றனர். அவர்கள் மாவட்டம் முழுதும் சென்று, திட்டப் பணிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு உள்ளன என, ஆய்வு செய்வர். வரும் 9ம் தேதி மாவட்டத்திற்கு வரும் துணை முதல்வரிடம், அது தொடர்பான அறிக்கை அளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை