உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாராட்டுகளும், நன்றியும்! புயல் பாதிப்பு மீட்புக்குழு நடவடிக்கையால் ஸ்டாலின் நெகிழ்ச்சி

பாராட்டுகளும், நன்றியும்! புயல் பாதிப்பு மீட்புக்குழு நடவடிக்கையால் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஈடுபட்டு வரும் மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் விழுப்புரம் மாவட்டத்தை புரட்டி போட்டுள்ளது. அங்கு மழையால் ஏற்பட்டு உள்ள சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ளச்சேதம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கியதோடு, வீடுகள் சேதம், கால்நடை இறப்பு, பயிர்ச்சேதம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்சாரத் துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாகப் பேரிடர் தடுப்புப் படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றியும்!இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

theruvasagan
டிச 03, 2024 16:29

நமக்கு நாமே திட்டத்தை அரசு அளவில் முதலில் அமல் படுத்தினால்தான் அது அடி மட்ட மக்கள் வரை சென்று அடையும். அதனாலதான் எங்களை நாங்களே தட்டிக் குடுத்துக்கறோம்.


vadivelu
டிச 03, 2024 07:25

நல்லது, மோடி வரவேண்டும், என்று கேட்க மாட்டார்கள், நிதியும் தேவை படாது.


karupanasamy
டிச 03, 2024 01:24

2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் எங்களைப்போல் தோற்றவர்களும் இல்லை வென்றவர்களும் இல்லைனு அறிக்கை விட்டுவிட்டு கயவன் டீவீயில் மொக்க படம் போட்டு மக்களை பழிதீர்க்கலாம்.


Vijay
டிச 02, 2024 21:36

ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும், தனக்கு ஓட்டு போட தமிழர்களின் விலை வெறும் 2000/- தான்.


மோகன்
டிச 02, 2024 20:59

இந்த உருட்டு நல்லா இருக்கு.... நடத்துங்க நடத்துங்க.....


Thiagu
டிச 02, 2024 20:41

அசிங்கம், அந்த பிஞ்சுகள் திருவண்ணாமலை, கண்ணீர் வருகிறது


Ramesh Sargam
டிச 02, 2024 20:00

அடுத்து சுயசான்றிதழ் வாசிக்கப்படும். அத்துடன் இன்றைய மழை செய்திகள் முடிவுக்கு வரும். மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.


C.SRIRAM
டிச 02, 2024 19:54

எல்லாமே போட்டோ ஷூட் என்பதற்கான முழு ஆதாரம்


rama adhavan
டிச 02, 2024 19:28

தனக்கு தானே ஆஷிர்வாதம்.


ManiK
டிச 02, 2024 18:32

நிச்சயமாக 2026ல தீமுகவும் சீஎம்மும் மண்ணை கவ்வுவது உறுதி. என்ன ஒரு திமிர்...தற்பெருமைக்கு ஒரு அளவில்லையா?!..நேரம்காலம் இல்லையா?!


rama adhavan
டிச 02, 2024 21:14

வாய்ப்பு இல்லை கண்ணா. எல்லா எதிர் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. அரவணைப்பும் இல்லை. ஓட்டும் இல்லை. கூச்சல் தான் பலமாக உள்ளது. அவை சிறு சுள்ளிகள் போல் உள்ளன. எனவே உடைப்பது சுலபம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை