உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்

 ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'தமி ழர்களுக்கு எதிரான 2,000 ஆண்டு கால போரில், நாங்கள் தோற்க மாட்டோம். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மத்திய அரசின் வெறுப்பு சண்டையில் நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம்' என, முதல்வர் ஸ்டாலின், இந்திய இறையாண்மைக்கு எதிராக, பிரிவினைவாதத்தை விதைத்து, திருநெல்வேலியில் பேசினார். அவருடைய பேச்சில் முழுக்கமுழுக்க பிரிவினை வாதமே உள்ளது. ஒன்றாக இருக்கும் நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்துடன் ஒரு மாநில முதல்வர் பேசியதை ஏற்க முடியாது. முதல்வரின் கருத்துகள் மீது விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாலாஜி
டிச 23, 2025 08:31

அமித்ஷா எதுவும்.....


Murugesan
டிச 23, 2025 07:55

ஆமாம் அப்படியே ..., திமுக இவ்வளவு கீழ்தரமாக மதவாதத்தை செய்த போதும் ஆட்சியை கலைக்காமல் இருப்பது கேவலம்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி