உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலு நாச்சியாருக்கு சென்னையில் சிலை

வேலு நாச்சியாருக்கு சென்னையில் சிலை

சென்னை:சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் சிலை சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் செப்.19ம் தேதி திறக்கப்படுகிறது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவரது சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராகவுள்ளது. செப்.19ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். நடிகர் விஜயின் த.வெ.க., கொள்கை தலைவராக வேலு நாச்சியார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால், வேலு நாச்சியாருக்கு, அரசு தரப்பில் அவசர அவசரமாக சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை