உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.டி.பி.ஐ., - மே 17 அமைப்புகளை தடை செய்க: அர்ஜுன் சம்பத் கொதிப்பு

எஸ்.டி.பி.ஐ., - மே 17 அமைப்புகளை தடை செய்க: அர்ஜுன் சம்பத் கொதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : “எஸ்.டி.பி.ஐ., மற்றும் 'மே 17' இயக்கத்தை அரசு தடை செய்ய வேண்டும்,” என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார்.பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்து விலகியோர், ஹிந்து மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற இக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ராணுவத்தில் மேஜராக இருந்த முகுந்த் வரதராஜன் என்ற வீரனின் உண்மை சம்பவத்தை வைத்து அமரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அமரன் படம், நாடு முழுதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், எஸ்.டி.பி.ஐ., மற்றும் மே 17 அமைப்பினர், படம் ஓடக்கூடிய தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இது கண்டிக்கத்தக்கது.இந்த படம், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் அல்ல. இஸ்லாமியர்களை தேச பக்தர்களாகத்தான் காட்டி உள்ளனர். ராணுவத்தின் பெருமையை சொல்கிறது. எங்கிருந்தோ வரும் துாண்டுதலின்படி, இந்த அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் இந்த இரு அமைப்புகளையும் அரசு தடை செய்ய வேண்டும். படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஆதரவாக ஹிந்து மக்கள் கட்சி நடத்திய பேரணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, எங்கள் கட்சியை நசுக்க வேண்டும் என்பதற்காக, சிலரின் துாண்டுதல் காரணமாக, கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது, கூட்டங்களுக்கு தடை விதிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் நேரடி கவனத்துக்கு இதை எடுத்து செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sundar R
நவ 11, 2024 11:40

தலைவர் என்ற வார்த்தையை உயர்திரு அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். இப்போது இருப்பவர்கள் வேறு எவரும் தலைவர் என்ற வார்த்தைக்கு யோக்கியதை உள்ளவர்கள் கிடையாது. அர்ஜுன் சம்பத் ஐயா அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியங்களையும் எல்லோரும் செய்து வந்தாலே தமிழகம் சூப்பராகி விடும்.


தமிழ்வேள்
நவ 11, 2024 11:33

தேசவிரோத சக்திகளை ராணுவ கோர்ட் விசாரணை செய்து தண்டனை கொடுப்பதுதான் நியாயமான ஒன்று ...லோக்கல் திராவிட போலீசை நம்ப முடியாது ...


vels
நவ 11, 2024 10:49

இந்த சூத்திர சங்கியின் ஆட்டம் தாங்கமுடியவில்லை


Neutrallite
நவ 11, 2024 10:45

சரியான கருத்து. ப்ராஹ்மண எதிர்ப்பு போராட்டத்தை நீர்க்க செய்வதற்காகவே இந்த சிறுபான்மையினர் போராட்டம்.


Agni Kunju
நவ 11, 2024 09:54

உள்ளூர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டாதீங்கன்னு சொன்னது போய்… இப்ப எந்த நாட்டு இஸ்லாமியரையும் தீவிரவாதிகளாக காட்டாதிங்கன்னு வந்து நிக்குது. கையாளாகாத ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கிக்காக பொத்திகிட்டு ஊழலே பிரதானமாக இருந்தால் தமிழ்நாடு விளங்கிவிடும்.


பேசும் தமிழன்
நவ 11, 2024 08:47

அட நீங்க வேற.... இந்த அரசே அவர்கள் போட்ட பிச்சை என்று.... சிறுபான்மையினர் என்று சொல்லி கொள்ளும் ஆட்கள் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள்..... இந்த அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் ???


veeramani
நவ 11, 2024 08:36

இந்தியாவின் இறையாண்மை பாதுகாப்பு ஒற்றுமை இவற்றில் சிறுதுலாவும் பங்கம் வர விடக்கூடாது. இதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. சில மதவாத காட்சிகள், அமைப்புகள் என பேர் சொல்லுபவைகளை ஒட்டு மொத்தமாக தடை செய்வது நாட்டின் இறைஆண்மைக்கு நன்று.


sridhar
நவ 11, 2024 08:21

எல்லா கேடுகளுக்கும் போலி திராவிடமே காரணம் . பணத்துக்கு அடிமை ஆகும் மக்கள் இவர்களுக்கு ஆதரவு.


krishnamurthy
நவ 11, 2024 08:12

சரியான கருத்தே


Oru Indiyan
நவ 11, 2024 07:59

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை , அரசு,. .. உம்


சமீபத்திய செய்தி