உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை

2,346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை

சென்னை: ''அரசு பள்ளிகளில் அடுத்த மாதத்துக்குள், 2,346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கூட்ட அரங்கில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

களைய வேண்டும்

இதில், அமைச்சர் மகேஷ் பேசியதாவது:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட திட்டங்களின் பயன்கள், மாணவ - மாணவியருக்கு முறையாக கிடைக்கிறதா என்பதை, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைவான தேர்ச்சி விகிதம் உள்ள மாவட்ட அதிகாரிகள், அதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரும் கோப்புகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். 'போக்சோ' வழக்குகளின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் விசாரணையை முடுக்கி விட வேண்டும். அரசு பள்ளிகளில், இம்மாதம், 20ம் தேதி வரை, 3 லட்சத்து, 35,428 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்களுக்கு வழிகாட்டும் இலவச தொலைபேசி சேவை எண்ணான, 14417ல் பெறப்பட்ட புகார்களுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும். குழந்தை திருமணம் குறித்த புகார்கள் வந்தால், உடனடியாக சமூக நலத்துறை அலுவலர்களுடன் இணைந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்குகள்

தொடக்கக் கல்வி இயக்ககத்தில், அடுத்த மாதத்துக்குள், 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கு தடையாக உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொழில் முனையும் சிந்தனையை வளர்த்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 'டேப்லெட்'கள்; இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சேலம், தேனி, நெல்லை, திருச்சி மாவட்டங்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vidya Sathyan
ஜூன் 30, 2025 19:22

வேஸ்ட் of money வேஸ்ட் ஒப்பி time


Vidya Sathyan
ஜூன் 30, 2025 19:17

Plez sir ஒரு வாய்ப்பு kudunga


Vidya Sathyan
ஜூன் 30, 2025 19:15

ஐயா நீங்கள் வயது முதிர்வு அடிப்படையிலும் வேலை வாய்ப்பு ஆபீஸ் பதிவு அடிப்படையில் தயவுசெய்து ஒரு வாய்ப்பு குடுங்க வயது 54 ஆகிறது படிச்ச துக்கு மதிப்பு குடுங்க


Amudhan Amudhan
ஜூன் 26, 2025 09:42

கணினி ஆசிரியர் போடுவேர்களா ஐயா


vimal arasu
ஜூன் 25, 2025 12:10

ஆசிரியர் காலியிடம் அதிகரிக்கவும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்று


Satheesh
ஜூன் 25, 2025 07:05

ஆட்சிக்கு வந்தவுடன் இடை நிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப படும் சொன்னீங்க. 5 வருடம் முடிய போகுது இப்பவும் அதேதான் நல்லா உருட்டு


Mani . V
ஜூன் 24, 2025 05:30

மகேஷு அடுத்த வருட தேர்தல் நாடகம்தானே இது ஆமா நாலு வருடமாக என்ன கழட்டுனீர்கள் என்று சொல்ல முடியுமா? எது கனிமவளக் கொள்ளை, சோமபான விற்பனை, சாக்கடைக்கு சேலை வழங்கியது, ஓடாத பஸ்சை இயக்குவதாக ஸீன் போட்டது, தண்ணீர் வராத மெஷினை இயக்கிவைத்தது, மூன்றாம் நாளில் இடிந்து விழுந்த கட்டிடத்தை திறந்து வைத்தது,...... இந்த வேலைகளைச் செய்தீர்களா?


முக்கிய வீடியோ