வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்படி? பாலாற்றை துரைமுருகன் பெயருக்குப் பட்டா போட்டா?
வேலுார்: ''பாலாறு மாசுபடுவதை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும், 'தாயுமானவர்' திட்டத்தை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்த நிலையில், வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் திட்டத்தை துவக்கி வைத்து, வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது: கேள்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது, தி.மு.க., கொண்டு வந்த ஏரி துார்வாரும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசியுள்ளாரே? அமைச்சர்: ஊருக்கு ஒரு ஏரியையாவது, அவர்கள் துார்வாரி இருப்பார்களா... பணத்தை ஒதுக்கினரே தவிர, ஒன்றை கூட துார்வாரவில்லை. இந்தாண்டு நாங்கள் துார்வாரிய ஏரியின் லிஸ்ட் எங்களிடம் உள்ளது. இது குறித்து, அப்போதே நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். துார்வாரிய ஏரியை வந்து காட்டுங்கள் என்றேன். எதற்கும் பதில் இல்லை. கேள்வி: பாலாற்றை மாசுபடுத்தும் வகையில், கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே? அமைச்சர்: அதில் ஒன்றும் மாற்றுக்கருத்து இல்லை. பாரபட்சமின்றி கண்டிப்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி: இந்த ஆட்சியில், அணைக்கட்ட, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், ஆனால் எதையும் கட்டாமல், தி.மு.க., ஏமாற்றுவதாக பழனிசாமி பேசியுள்ளாரே? அமைச்சர்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை, எத்தனை அணைகளை கட்டி உள்ளோம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளேன். சும்மா வீம்புக்கு பேசுகிறார் அவர். இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி? பாலாற்றை துரைமுருகன் பெயருக்குப் பட்டா போட்டா?