உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கான நிதி நிறுத்தம்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கான நிதி நிறுத்தம்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறோம்,' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவரின் உயர்வு,மேன்மைக்கு அடிப்படை கல்வி தான். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சி வரிசையோ என்றைக்கும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். தமிழகத்திற்கான கொள்கைக்கு குரல் கொடுப்போம் .தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிய போது, கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார்.தேசிய கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழியை முடிவு செய்வதிலும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.மாநிலபட்டியலுக்கு மாற்றவில்லை என்றால், பலருக்கும் கல்வி எட்டாக்கனியாக மாறிவிடும். தடுப்புச்சுவர்களை எழுப்பி எழுப்பி பலரையும் பாதி தூரத்தில் நிறுத்தி கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்திவிடுகின்றனர். மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதால் மத்திய அரசு தர வேண்டிய நிதியை மறுப்பது அனைவருக்கும் தெரியும். பார்லி குழு பரிந்துரை செய்த நிதி தான் அது. குழந்தைகள், ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு வழக்கு தொடரத்தான் போகிறது. இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Kulandai kannan
மே 18, 2025 19:41

ED ரெய்டு வேலை செய்கிறது.


ஆரூர் ரங்
மே 18, 2025 11:56

மத்திய அரசு நிதியளித்தால் எல்லா மாணவர்களுக்கும் யுனஸ்கோ தென்கிழக்காசிய சாக்ரட்டீஸ் பட்டங்களை வாங்கித் தருவார். அதனை தடுக்கலாமா?


V.Mohan
மே 18, 2025 09:45

நிதி தரவில்லை என்று புகார் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. ஐயா. எந்த அரசோ, ஐ.எம். எஃப். போன்ற நிதிநிறுவனமோ, அவர்கள் நோக்கம் நிறைவேற்ற தரும் நிதியே தவிர உங்களுக்கு இலவசமாக தரும் ப்ஃண்ட் அல்ல. மும்மொழி கொள்கை உங்களுக்கு வேண்டாம் என்றால் உங்களுக்கு நிதி தர வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. மாநிலப்பட்டியலில் தான் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பு அமைந்துள்ளது. அதை உங்கள் விருப்பப்படி தான் செய்கிறீர்கள். ஆகவே அது ""உங்கள் சாய்ஸ்". ஆனால் பட்ட மேற்படிப்பும், உயர்கல்வி முறைகளும் "" கன்கரண்ட்"" லிஸ்ட் அதாவது மத்திய அரசுப் பட்டியலில் உள்ளது அதை யு ஜி. சி. எனப்படும் யுனிவர்சிடி கிராண்ட்ஸ் கமிஷனுக்குத் தான் நிர்வகிக்கிற உரிமை உள்ளது. உயர்கல்வியைப் பொறுத்து மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தரப்பட்டுள்ளது. தமிழக அரசு மசோதா விஷயத்தில் வெற்றி அடைந்ததாக கூறுவது அவசரமான மதியீனம். உயர்கல்வி விஷயத்தில் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம். கீழ்மட்டக்கல்வி விஷயத்தில் தமிழ்நாடு தன் சவுகரியத்துக்கு செய்யலாம். மும்மொழி கொள்கை என்ற நோக்கத்திற்காக தரப்படும் நிதி தமிழ் நாட்டுக்கு சட்டப்படி கிடைக்காது.. கல்வி நிதி வழக்கம்போல் உள்ளதை தான் மத்திய அரசு தரும்போது வாங்கிக்கொள்ளலாம். மும்மொழிக் கொள்கைக்கான சிறப்பு திட்ட நிதி பெற தமிழ்நாடு தகுதி பெறாததால் அது கிடைக்காது. சும்மா சும்மா மத்திய அரசு கல்விநிதி தரவில்லை என உண்மையற்ற விளம்பரப் பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டாம். மக்கள் பார்க்கிறார்கள், படிக்கிறார்கள், தெளிந்திருக்கிறார்கள். இப்படி உண்மையை மறைத்துப் பேசுவது மக்கள் தந்த முதல்வர் பதவிக்கு இழுக்கு


Barakat Ali
மே 18, 2025 09:16

பலருக்கும் கல்வி எட்டாக்கனியாக மாறிவிடும். தடுப்புச்சுவர்களை எழுப்பி எழுப்பி பலரையும் பாதி தூரத்தில் நிறுத்தி கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்திவிடுகின்றனர். ........ அன்றாடங்காய்ச்சி குப்பன், சுப்பனின் வாரிசுகள் சன்ஷைன் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா ????


ramesh
மே 18, 2025 07:57

சந்தைக்கு போகணும், ஆத்தா வையும் காசு கொடு... நான் போகணும் -


தாமரை மலர்கிறது
மே 18, 2025 07:33

புதிய கல்விக்கொள்கைக்கான பணத்தை, அதை கடைபிடிப்பவர்களுக்கு தான் கொடுக்க முடியும். வேலை செய்யாமல் கூலி வேணுமா?


Mani . V
மே 18, 2025 06:58

தொல்லை தாங்க முடியவில்லை.


venugopal s
மே 18, 2025 06:44

உச்ச நீதிமன்றம் பேரைச் சொன்னாலே .....


vivek
மே 18, 2025 07:53

.......சொன்னாலே த்ரவிடதிற்கு??


xyzabc
மே 18, 2025 05:56

நாட்டின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு பணம் வேண்டும். எப்போதும் கணக்கு கேட்க கூடாது.


A1Suresh
மே 18, 2025 04:11

ஐ எம் எப் கொடுத்த நிதியில் 14 கோடியை மசூர் அசாத்துக்கு பாகிஸ்தான் தந்தது போல மத்திய அரசு தரும் நிதியை சுடாலின் சொந்த பாக்கெட்டில் போட்டு கொள்வார் என நாடே அறியுமே