உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1e9bgy1t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர். அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதியில் கல்லுாரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

தமிழ்வேள்
நவ 03, 2025 20:28

கோட்டை மேடு ஏரியாவில் தேடினால் உடனடியாக சிக்கும் வாய்ப்பு உள்ளது.. அல்லது கோவையில் பண்ணை வீடுகள் தோட்டம் காடுகளில் நேரடியாக சோதனையிட்டால் நிச்சயமாக அகப்படுவான்கள்


ஜெகதீசன்
நவ 03, 2025 17:42

குடி, போதை, சில பின்புல ஆதரவுடன் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை ஆகியவை இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தாலும், ஏன் காதலர் இருவரும் ஏர்போர்ட் பின்புறம் ஏன் போகனும்? காதலிக்க இடமா இல்லை? தவிர்த்திருக்கலாம்.


Gnana Subramani
நவ 03, 2025 16:39

பாலியல் கொடுமை செய்தவர்கள் இந்துக்களாக இருந்தால் பிஜேபி ஆட்கள் மாலை போட்டு வரவேற்பார்கள்


பேசும் தமிழன்
நவ 03, 2025 19:28

குற்றவாளிகளின் பெயர்கள் இல்லாமல்.... மர்ம நபர்கள் சிலர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.


ராஜ்
நவ 03, 2025 22:04

மர்ம நபர்களாக இருக்க தான் வாய்ப்பு


duruvasar
நவ 03, 2025 16:34

எவ்வளவு தனி படைகள் கையில் வலையோடு அலைகிறார்கள் என்று விசாரித்து செய்தி வெளியிடவும் .


Krishna
நவ 03, 2025 16:15

Instead of CHEAP-POLITICS, Monitor All PublicNuisance IllicitSexFriends in All PublicPlaces for ArrestDefamePunish. How Pocso in CollegeStudent???


Ramalingam Shanmugam
நவ 03, 2025 15:33

அந்த நேரத்தில் அங்கே போக வேண்டிய அவசியம் என்ன


Shekar
நவ 03, 2025 13:18

நேத்துதனே உச்ச நீதிமன்றம் ஒரு கேஸில், இது காமத்தினால் அல்ல அன்பினால் என்று தண்டனையை ரத்து செய்தது. இதற்கு என்ன சொல்ல போகிறார்களோ


Ramalingam Shanmugam
நவ 03, 2025 15:30

சுடும் வெட்கம் கெட்டவனுங்க


Raja k
நவ 03, 2025 12:37

இதுல என்ன சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கு, குற்றம் நடக்கும் முன்பே தடுத்து இருக்கனுமாம் எப்படி? போற இடத்துக்கு சொல்லீட்டு போனாங்களா


Svs Yaadum oore
நவ 03, 2025 13:21

உண்மைதான் .....எங்காவது வெளியில் போகும்போது அங்கே குற்றம் நடக்கும் என்று தெரிஞ்கிக்கிட்டு திராவிட போலீசுக்கு சொல்லிட்டு போகணும் ...அப்படி செய்தால் உடனே திராவிட போலீஸ் அதை தடுத்து இருக்கும் ...சொல்லாமல் போய்விட்டு அப்பறம் திராவிட மாடலை குறை சொன்னால் எப்படி?? ...


Muralidharan S
நவ 03, 2025 12:22

சவுதி போல குற்றவாளிகளை கண்டுபிடித்து, காலம் முழுவதுவும் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபடமுடியாமல் அவர்களுடைய.. இது போன்ற கடுமையான தண்டனை சட்டங்கள் இருந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும்.. மேலும் காவல்துறை ஜனாதிபதியின் கீழ் ராணுவம் போல கொண்டு வந்து, அரசியல் வியாதிகள் தலையீடு இல்லாமல் செய்து முழு சுதந்திரம் குடுக்க வேண்டும்.. இது இரண்டும் செய்தால், இந்தியா முழுவதும் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு..


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 03, 2025 13:27

அவ்வளவு தூரம் போகவேண்டாம்.. ஒரு மாநிலத்தின் நன்மைக்கு மிகவும் அவசியம் சட்டம் ஒழுங்கு.. அது அந்தந்த டி எஸ் பி மற்றும் கலெக்டர் கையில் .... அவர்களைக் கட்டுப்படுத்த கவர்னர் ..... இப்படி இருக்க வேண்டும் ...


Gnana Subramani
நவ 03, 2025 16:37

முதல்வர் பிரதமர் போன்ற பதவிகளை நீக்கி விடலாமா


தமிழ்வேள்
நவ 03, 2025 20:33

சுப்பிரமணி, மாநில அரசு, குறிப்பாக இன், மொழி வேற்றுமை வளர்க்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போலீஸ் ரெவின்யூ அதிகாரங்கள் தேவையில்லை என்பதுதான் இதன் பொருள்.. ஸ்ரீ லங்கா பாணியில் காணி ரெவின்யூ போலீஸ் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு தடுக்கப்பட்டால் திராவிட கட்சிகள் மொத்தமாக அழிந்து போய்விடும். .போலீஸ் கவர்னர் மற்றும் பாரத உள்துறை அமைச்சுக்கு நேரடி பொறுப்பு கூறும் அமைப்பாக இருப்பதுதான் நல்லது...


Venkatesan Ramasamay
நவ 03, 2025 12:10

தவறு எங்கிருந்து தொடங்குதுன்னு பார்க்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை