உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் மாணவர் மகிழ்முற்றம்; குழு செயல்படுத்த அரசு உத்தரவு

பள்ளிகளில் மாணவர் மகிழ்முற்றம்; குழு செயல்படுத்த அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில், மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்க, விடுப்பு எடுப்பதை குறைக்க, ஒற்றுமை கல்வியை ஊக்குவிக்க, அனைவருக்கும் வாய்ப்பு, நேர்மையான நடத்தை, தலைமைப் பண்பு, ஆசிரியர்-மாணவ உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கங்களாகும்.மகிழ் முற்றம் அமைப்பு,பள்ளி தலைமையாசிரியர், மாணவர் குழு அமைப்பை வழி நடத்த வேண்டும்.இக்குழுவில் பள்ளி மாணவ, மாணவி இருவர் குழு தலைவராக இருக்க வேண்டும்.ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் குலுக்கல் முறையில் வகுப்பு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.எமிஸ் தளத்தில் மாணவர் குழு அமைப்பு செயல்பாடுகளை உள்ளீடு செய்ய வேண்டும். அதற்கு புள்ளிகள் அடிப்படையில் வெற்றி குழுவாக அறிவிக்கப்படும்.மாணவ குழுக்கள் பெற்ற புள்ளிகளை கரும்பலகையில் தெரிவிக்க வேண்டும்.மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு, மாவட்ட கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்ல வட்டாரக்கல்வி அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும்.மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் செயல்பாடுகளை, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் கருத்துக்களை ஆலோசனை நடத்தி, செயல்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

karupanasamy
அக் 05, 2024 02:09

சரக்கு விக்குறதுக்கு அடித்தளம் போடுறானுங்க போதை மாடல் அரசு ஆட்கள்


கிஜன்
அக் 04, 2024 22:58

தெளிவா சொல்லுங்கப்பா .... ஒரு காலத்துல மனமகிழ் மன்றங்கள் எல்லாம் பீடி குடிக்க கற்றுத்தரும் இடங்களாக இருந்தன .... போலீசார் அவற்றை கலைக்க பெரும்பாடு பட்டனர் .... திரும்பவுமா ?


rama adhavan
அக் 05, 2024 03:08

இதிலும் ஸ்டிக்கரா?


முக்கிய வீடியோ