ஓமலூர் : ஓமலூரில், மாணவனிடம், 'ஹோமோ செக்சில்' ஈடுபட்ட டியூஷன் மாஸ்டரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் - வள்ளி தம்பதியரின் மகன் குமார், 11. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள ஜெயஜோதி மெட்ரிக்குலேசன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும், ராஜேந்திரன் மகன் பாலசுப்ரமணி, 25, என்பவரிடம், டியூஷன் படித்து வந்தார். கடந்த 13ம்தேதி, இரவு 7 மணிக்கு, டியூஷன் முடிந்து அனைவரும் புறப்பட்டதும், மாணவன் குமாரை மட்டும், 'ஹோம் ஒர்க்' முடித்து போகும்படி, பாலசுப்ரமணி கண்டிப்புடன் கூறினார். 'ஹோம் ஒர்க்' முடித்து, பாலசுப்ரமணியிடம் காண்பிக்க சென்ற குமாரிடம், 'ஹோமோ செக்சில்' ஈடுபட்டு, 'நடந்ததை வெளியே சொல்லக் கூடாது' என, மிரட்டி அனுப்பினார். இருந்தும், டியூஷன் மாஸ்டர் நடந்து கொண்டது பற்றி, குமார், தன் பெற்றோரிடம் கூறி, கதறி அழுதார். மாணவனின் தந்தை போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, டியூஷன் மாஸ்டர் பாலசுப்ரமணியை நேற்று, போலீசார் கைது செய்தனர்.