உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு ‛‛இவங்களே காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே காரணம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக செய்துள்ளதால் முதலிடம் கிடைத்துள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே மகத்தான வெற்றிக்கு காரணம். ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.சென்னை ஐஐடி.,யில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள், ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டன. முதல் 3டி பிரிண்டட் ராக்கெட், முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நாங்கள் செய்துள்ளோம். ஹைப்பர்லூப் உள்ளிட்ட பல திட்டங்களை செய்துள்ளோம். 'ஸ்டார்ட்அப் 100' போன்ற சில தொலைநோக்கு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதெல்லாம் முழுமையடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். நம் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு இளநிலை பட்டப்படிப்பையாவது படிக்க வேண்டும். அதற்காக சென்னை ஐஐடி.,யை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல எங்கள் முயற்சியை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Jaihind
ஆக 14, 2024 07:36

நிறைகுடம் ததும்பாது.. வாழ்க பாரதம்.


Kasimani Baskaran
ஆக 13, 2024 23:58

அப்ப மாடல் அரசு...


Ramesh Sargam
ஆக 13, 2024 20:18

ஆகமொத்தத்தில் தமிழக அரசோ, முன்னாள் அதிமுக அரசோ, ஸ்டாலின் அவர்களோ காரணம் இல்லை என்று சூசகமாக சொல்கிறார்.


m.n.balasubramani
ஆக 13, 2024 19:47

மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 13, 2024 17:58

ஆரியர்களாகிய உங்கள் முயற்சியை திராவிட மாடல் நிறைவேற்ற விடாது ..... மக்களை திராவிட மாடல் என்னும் போதையில் ஆழ்த்தியே வைத்திருப்போம் ...


Anand
ஆக 13, 2024 17:29

தரவரிசையில் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி இயக்குநர் என்ன சொல்கிறார் பாருங்கள், தன்னோட ஓயாத உழைப்பு தான் காரணம் மார்தட்டியிருக்கலாம் ஆனால் அப்படி சொல்லவில்லை, இதுதான் பெருந்தன்மை என்பது, மாறாக இதில் துளி கூட சம்பந்தமே இல்லாத துண்டு சீட்டு, ஸ்டிக்கர் ஒட்டி என்னமா பீத்திக்கொள்கிறது.


Srinivasan K
ஆக 13, 2024 18:31

excellent


விஜய்
ஆக 13, 2024 22:10

சூப்பர் துண்டு சீட்டு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை