மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சேலம் : தமிழகத்தில், லேப் வசதி இல்லாத உயர்நிலைப் பள்ளிகளுக்கு, ஆய்வுக்கூட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், உபகரணங்களை வழங்காமல், 'லேப்' அமைப்பதற்கான வசதியை செய்து தர வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி நிதியாக, 2009 - 10ம் ஆண்டில், 4,841 பள்ளிகளுக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாய் வீதம், 19.36 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில், லேப் உபகரணங்களில், வெர்னியர் காலிபர், ஸ்க்ரூ கேட்ஜ், சிம்பிள் பெண்டுலம், சோனா மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. 2010 -11ம் கல்வியாண்டில், தரம் உயர்த்தப்பட்ட, 200 பள்ளிகளுக்கும், நிதி ஒதுக்கப்பட்டதோடு, மீண்டும் சிம்பிள் மைக்ரோஸ்கோப், காம்பவுண்ட் மைக்ரோஸ்கோப், ரசாயனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இதுவரை, ஆய்வுக்கென தனியாக அறை வசதி ஒதுக்கப்படாமல், 'லேப்' உபகரணங்கள் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கி வருவதால், அவை தலைமை ஆசிரியருக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எந்த உயர்நிலைப் பள்ளிக்கும், ஆய்வுக்கூட அறை மற்றும் அதற்கான வசதிகள் செய்து தரவில்லை. ஆனால், திட்ட நிதியில் பணம் வருகிறது என்பதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும், ஆய்வுக்கூட கருவிகள் வழங்கப்பட்டு விட்டன. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில், 'பார்சலை' பிரிக்காமலேயே பத்திரமாக பாதுகாக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து ஆய்வுக்கூட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இந்த பார்சல்களுக்கே தனி அறை தேவைப்படுகிறது. இந்த கல்வியாண்டிலாவது, 'லேப்' உபகரணங்கள் வழங்காமல், அதற்கான வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இவற்றை உபயோகப்படுத்தவும், மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாகவும் அமையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 hour(s) ago