உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்னை மரங்கள் பாதிப்பு இழப்பீட்டுக்கு கணக்கெடுப்பு

தென்னை மரங்கள் பாதிப்பு இழப்பீட்டுக்கு கணக்கெடுப்பு

சென்னை:பல்வேறு மாவட்டங்களில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீடு வழங்க, தோட்டக்கலைத் துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில மாவட்டங்களில் உற்பத்தியாகும் இளநீர், தேங்காய் ஆகியவை, வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயற்கை சீற்றம், வறட்சி, நோய் தாக்குல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், தென்னை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தற்போது ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்பட்டு வருகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தென்னை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலைத் துறை வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, முதற்கட்டமாக எவ்வளவு தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்த, தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பதிலாக, மறுநடவு செய்வதற்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை