உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!

இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராஜசேகர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.மதுரை சுந்தரராஜபுரம் அருகே ரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். சென்னையில் டாஸ்மாக் மேற்பார்வையாளராக உள்ளார். இவருக்கு கோவலன் நகர் அருகே சுப்புலட்சுமிநகரில் இரண்டே முக்கால் சென்ட் நிலம் உள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்த இடத்திற்கான நான்கு மால்களையும் அளந்து தரும்படி விண்ணப்பித்தார். மதுரை தெற்கு தாலுகா சர்வே பிரிவில் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து இடத்தை பார்க்கவோ, அளந்து தரவோ முன்வரவில்லை. அதேசமயம் மூன்று மாதத்திற்குள் முடிக்கும் எண்ணத்தில் மே 11ல் விண்ணப்பத்திற்கு 'அப்ரூவ்ட்' என வழங்கி முடித்துவிட்டனர். அதேநேரம் இடத்தை அளந்து தருவதற்கு மீண்டும் விண்ணப்பிக்கும்படி சர்வேயர் ராஜசேகர் தெரிவித்தார். இதையடுத்து பாலமுருகன் மே 31ல் மீண்டும் விண்ணப்பித்தார். அதன்பின்னும் இடத்தை அளக்கவரவில்லை. அவரை தாலுகா அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அலுவலகத்தில் வைத்து பாலமுருகனிடம் இருந்து பணத்தை பெற்ற சர்வேயர் ராஜசேகரை ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிபிரியா கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Karthikeyan S
ஜூன் 06, 2025 13:23

கோடி எதுக்கு குடுக்குறான் பல கோடி திருடத்தானே


Jayashree
ஜூன் 06, 2025 05:51

இதே நபரினால் நானும் பிரச்சினையை சந்தித்து உள்ளேன்


r.thiyagarajan
ஜூன் 05, 2025 21:28

ஒரு அரசு பணியாளருக்கே இந்த நிலைமை … ஒவ்வொருவரும் இப்படி செய்தால் இனி வரும் காலங்களில் லஞ்சம் படிப்படியாக குறையும்


D Natarajan
ஜூன் 05, 2025 21:21

3000 லஞ்சம் கைது. ஆனால் கோடியில் லஞ்சம் வாங்கின நீதிபதி கைது இல்லை. இந்திய சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லை. வேதனை


முருகன்
ஜூன் 05, 2025 20:28

அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதே இவர்களுக்கு வேலையா பேச்சு பதவியை நிரந்தரமாக பறிக்க வேண்டும்


RG GHM
ஜூன் 05, 2025 19:32

பெரும் முதலைகளை பிடிக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 05, 2025 18:52

கோட்டாவில் நீந்தி முத்தெடுக்கும் திராவிட வேடன்.


V RAMASWAMY
ஜூன் 05, 2025 18:51

அரசு வேலை என்றால் சும்மாவா? சம்பளம் வாங்குவது அலுவலத்தின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்கு மட்டுமே. வேலை செய்யவேண்டுமென்றால் அதற்கு தேவையானவர் தேவையை பூர்த்தி செய்தால் தான் நடக்கும். இது தான் மாடல். வெட்கக்கேடு.


D.Ambujavalli
ஜூன் 05, 2025 18:50

வலையில் சிக்கிய சில மீன் குஞ்சுகள், கிளிஞ்சல்கள் என்று ‘சாதனை’ எண்ணிக்கையைக் காட்டிவிட்டு,ஆயிரம் கோடிகள் , லட்சம் கோடிகளையெல்லாம் தப்புவிக்க சில்லரைக்கோடிகளை வாங்கிக்கொண்டு‘கடமையாற்றும்’லஞ்ச ஒழிப்பு, அமலாக்கம் துறைகள் உள்ளவரை மஹாராஜாக்களுக்கு பாதுகாப்பு, சேவகனுக்குக் கைக்காப்பு என்பதுதான் விதி என்று ஏற்பட்டுவிட்டது ,


சிவராமகிருஷ்ணன்
ஜூன் 05, 2025 18:45

கோடிக்கணக்கில் காசு அடித்தவன் எல்லாம் வெளியே வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.


புதிய வீடியோ