உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாசில்தாரை தாக்கிய வழக்கு: அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

தாசில்தாரை தாக்கிய வழக்கு: அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி., அழகிரி மற்றும் திமுக.,வை சேர்ந்தவர்கள் என 17 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி, வல்லடிகாரர் கோயிலுக்குள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uh9aotke&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை வீடியோ எடுக்க வந்த மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்துவை முன்னாள் எம்.பி., அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுக.,வை சேர்ந்த சிலர் தாக்கியதாக கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து 21 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இன்று (பிப்.,16) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

SIVA
பிப் 17, 2024 08:33

பொய் வழக்கு போட்ட தாசில்தாருக்கு ஏன் தண்டனை கொடுக்க வில்லை .....


Muthu, Madurai
பிப் 17, 2024 06:47

I hope the high court will review the case


D.Ambujavalli
பிப் 17, 2024 06:41

சபாஷ் அடித்தவரும், அடிபட்டவரும் உயிருடன் இருக்கும்போதே தீர்ப்பு வழங்கிவிட்ட. விரைவு நீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள்


தாமரை மலர்கிறது
பிப் 16, 2024 19:56

உனக்கென்னப்பா, உன் தம்பி முதல்வராக இருக்கும்போது, சட்டபடி நீ கலெக்டரை கூட தாக்கலாம்.


Narayanan Krishnamurthy
பிப் 16, 2024 17:02

Narayanan Krishnamurthy


Raj Kumar
பிப் 16, 2024 16:55

தேர்தலில் இனி எந்த அதிகாரியும் நேர்மையா வேலை செய்ய முடியாது


Raj
பிப் 16, 2024 16:36

நீதிமன்றத்தை எல்லாம் மூடிவிட்டு, லுலு கையில் கொடுத்தால் மால் ஆவது கட்டிவிடுவார்கள்... அதற்காவது உபயோகப்படும். இந்த விதியை 2011 லே கொடுத்து இருக்கலாமே. காரணம் விடியல் ஆட்சி இப்போ தானே வந்தது.


A. Sathiamurthy
பிப் 16, 2024 16:32

அடிவாங்கியவர்களும் மறந்திருப்பார்கள். அதனால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.


rasaa
பிப் 16, 2024 16:21

லட்சுமி செல்வம் கொழிக்கும் தெய்வம். தாசில்தார் தன்னைத்தானே தாக்கிக்கொண்டார். மனநிலை சரியில்லாதவர்.


vijay
பிப் 16, 2024 16:17

This is called Dravida model .Some time judgement will come against the truth .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை