உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுங்கள்

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுங்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, சாதாரண நிகழ்வாக கருத இயலாது. இது, 140 கோடி இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத்தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே, பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.ராணுவ நடவடிக்கை என்றால், அது ஒரு தரப்புக்கு மட்டுமல்ல; இரண்டு தரப்புக்குமே பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். ஆனால், இப்போது அதை தாண்டி, வேறொரு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் குதிரை ஓட்டுபவர்களை போலவும், ராணுவ வீரர்களை போலவும், உள்ளே புகுந்து தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்திய அரசு இதற்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை, இந்தியாவோடு இணைக்க வேண்டும். இந்திய அரசு கவலைப்படாமல், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்டால், இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும். அதனால், உடனே ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். - கிருஷ்ணசாமிதலைவர், புதிய தமிழகம் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை