மேலும் செய்திகள்
இலவச பட்டா கேட்டுநரிக்குறவர் மக்கள் மனு
20-Mar-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் நரிக்குறவர் இன மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டாதல் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகினறனர். இவர்கள் வீட்டுமனை பட்டா, காலிமனை பட்டா, சாதி சான்றிழ் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று மாலை 4 மணியளவில் நரிக்குறவர் சுபத்(எ) பசுபதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் விஜயன், நரிக்குறவர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் 4.30 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
20-Mar-2025