உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியை ஆட்டிப் படைத்தவர் தமிழ் வீரர் டி.வி.ஆர்.,

சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியை ஆட்டிப் படைத்தவர் தமிழ் வீரர் டி.வி.ஆர்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பாதலைவர், தமிழ் முழக்கப் பேரவை, திருநெல்வேலி டி.வி.ஆருடன் நெருங்கிப் பழகிய நண்பர்நாடு சுதந்திரம் பெற்றதும், திருவிதாங்கூர் சமஸ்தானமும், கொச்சி சமஸ்தானமும் ஒருங்கிணைந்து கேரளமானது. திருவிதாங்கூரில் வாழ்ந்த தமிழர்கள், குறிப்பாக நாஞ்சில்நாட்டு மக்கள், தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் எனக் கோரினர். ஆனால், மலையாளிகள், திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் மட்டு மின்றி, திருநெ ல்வேலி, நீலகிரி, கோவை மாவட்டங்களையும் தம்முடன் இணைக்க வே ண்டு ம் என்ற கோரிக்கை யை வலியுறுத்தினர். கேரளப் பிரதேச காங்கிரஸ் மூன்று பிரிவுகளாகச் செயல்பட்டது. மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவுகள். இவை ஒன்றுபட்டு, காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை, 'கேரள மாநிலம் அமைக்க வேண்டும்' என்று முடிவு செய்தன. அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், வி.கே.கிருஷ்ணமேனன், கே.பி.எஸ். மேனன், வி.பி.மேனன், லட்சுமி மேனன் ஆகியோர் செல்வாக்கு செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் கேளப்பன், பிர ஜா சோஷலிஸ்ட் தலைவர் பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோரும் ஒன்றுபட்டு கேரளத்தை உருவாக்க முனைந்தனர். இந்த நிலையில் மாநில புனரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் பசல் அலி தலைவராகவும், கேரளாவைச் சேர்ந்த கே.எம்.பணிக்கர் உறுப் பினராகவும் இருந்தனர். தமிழகம் - கேரளம் பிரச்னைகள் விவாதிக்கப்படும் போதும், பணிக்கர், கேரள பகுதிகளுக்கு ஆதரவாகவே வாதிட்டார்.

டி.வி.ஆர்., எழுச்சி

இந்த நிலையை புரிந்த கொ ண்ட டி.வி.ராமசுப்பையர் , குமரி மாவட்டம் நம்மை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தில், தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் மலையாள பத் திரிகைகள் வலுவாகச் செயல்பட்டதால், தமிழர்களின் நிலையை உலகுக்கு வெளிப்படுத்த, 06.09.1951 அன்று திருவனந்தபுரத்தில், 'தினமலர்' பதிப்பை துவங்கினார். இந்த துணிச் சலும், தைரியமும், டி.வி.ஆருக்கே உரியது. கேரள அமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை நடத்திய தாக்குதல்கள், வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, தமிழர்களுக்குள் விழிப்புணர்ச்சி ஊட்டினார்.

பத்திரிகைகளின் பங்கு

தினமலர் நாளிதழ் மட்டுமே தமிழர்களின் போர்வாளாக இருந்தது. ஆனால், அதுவே போதாது என்று உணர்ந்த டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பத்திரிகை அதிபர்களிடம் நிலைமையை விளக்கினார். பின் சென்னையில் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து வந்து, தமிழர்கள் பகுதிகளை சுற்றுப்பயணம் செய்ய வைத்தார். இதன் பின்பே, அகில இந்திய அளவிலான பத்திரிகைகளில், தமிழர்களுக்கான ஆதரவு செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.

எல்லை போராட்டம்

மார்ஷல் நேசமணி, தியாகிமணி, குஞ்சன் நாடார், சிதம்பர நாடார், தோழர் ஜீவானந்தம், கவிமணி விநாயகம் பிள்ளை, ம.பொ.சிவஞானம் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டங்களை, மக்கள் தினமலர் நாளிதழ் மூலமாகவே அறிந்தனர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழ கத்துடன் சேர வேண்டும் என, தினமலர் தொடர்ந்து எழுதியது. 1949 இறுதியில் ம.பொ.சி., நடத்திய தமிழக எல்லை மாநாட்டில் குமாரசாமி ராஜா, டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டனர். 'வட வேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகம் ஒன்றிணைய வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமரி இணைப்பு - தினமலரின் வெற்றி

திருவனந்தபுரத்தில் 1881 நாட்கள் போராடி, 01.11.1956 அன்று குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 'திருப்பதி நமக்கு சேரவில்லை; அங்கேயும் தினமலர் இருந்திருந்தால், அது நம்மை விட்டு போயிருக்காது' என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர். மொழி மாநிலம் அமைந்தபின், 15.04.1957 முதல் தினமலர் பதிப்பு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. பின் 10 பதிப்புகளுடன் தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாக வளர்ந்தது.

கவிஞர்களின் வாழ்த்துகள்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - 06.09.1951: ஈசன் அருளால், எழுத்தாளர் உழைப்பால், வாசகரின் ஆசி, வலிமையால் பேசி, பூத்த புகழ் பெறும் தினமலர், வாடாது வாழ்க வளர்க! கவிஞர் கண்ணதாசன் - 06.09.1976: மணமலர் விருந்து நின்று மனம் பெறச் செய்யும் ஏடு இனமலர் பலவும் வாழச் செயல்படும் எழிலார் ஏடு வனமலர் கூட்டம் போல வளமிகும் பொருள் சேர் ஏடு தினமலர் பன்னாள் வாழ்க, திருமகன் கண்ணன் காக்க! முதல்வர் எம்.ஜி.ஆர். - 16.03.1984: இதழ் உதிராமல், மக்களுக்காக தினம் மலரும் புதிய மலர் தான் தினமலர். மக்களின் நன்மைக்காகவும், மக்களை ஒன்றுபடுத்தவும் மலரும் இந்த தினமலர் பெருகட்டும், வளரட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
அக் 03, 2025 19:02

நிறை குடம் தளும்பாது என்பதுபோல் விடாமுயற்சியுடன் போராடி தமிழ் வீரர் டி வீ ஆர் கேரள குகைக்குள் புகுந்து உலுக்கி எடுத்து கன்னியாகுமரியை தமிழ் நாட்டுடன் இணைத்திருக்கிறார். செய்திகளை முந்தித்தரும் பத்திரிகையை இன்று முந்தி நிற்கிறது "தினமலர் "...


Amar Akbar Antony
அக் 03, 2025 17:18

கிட்டத்தட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் நான் படிக்க / மணக்க துவங்கிய இந்த தமிழரின் தினமலர் இன்றும் மனம் பரப்பிக்கொண்டிருக்கிறது. இந்த பெரியவரின் தமிழ் பற்றும் இனப்பற்றும் மற்ற இன்றைய நேற்றைய அரசியல் வாதிகளைப்போல் அல்லாமல் தமிழகத்தின் மீதான உணர்வும் தேசப்பற்றும் கொண்டவராக வரலாறு கூறுகிறது.


Yasararafath
அக் 03, 2025 16:18

வாழ்த்துக்கள்


chennai sivakumar
அக் 03, 2025 11:33

இங்கு தமிழ் நாட்டில் பாதி பேருக்கு ஒழுங்காக தமிழே தெரியாது. கேட்டால் நான் தமிழன் என்பான். அவனுக்கு மா பொ சி, டி வீ ஆர் போன்றவர்களை யார் என்று கேட்கும் நிலையில் உள்ளது. இப்படியே போனால் காந்தி யார் என்று கேட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் நாட்டு வரலாறு என்றுநொரு பாடம் வைத்தால் அதில் ஒன்லி திராவிடர்கள் புகழ் பாடும்.எண்ணத்தை சொல்ல. எல்லாம் போன ஜென்மத்தின் பாவம்


Kulandai kannan
அக் 03, 2025 11:15

கன்னியாகுமரி கேரளத்திலேயே இருந்திருந்தால், தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த அளவு மதமாற்றம் நடைபெற்றிருக்காது. குமரி கொடுத்த தைரியத்தால் மற்ற மாவட்டங்களிலும் கடை விரிக்கிறார்கள் மிஷனரிகள்.


Kalyanaraman
அக் 03, 2025 09:30

"1949 இறுதியில் ம.பொ.சி., நடத்திய தமிழக எல்லை மாநாட்டில்..." வருடத்தில் ஏதோ தவறு இருக்கிறதா? 1951-ல் தினமலர் புதிதாக மலர்ந்துள்ளது என்பதும் தெரிகிறது.


Field Marshal
அக் 03, 2025 07:20

திராவிட பரம்பரை பெரியார் தவிர யாரையும் மதிக்கமாட்டார்கள்


KOVAIKARAN
அக் 03, 2025 07:07

தினமலரை ஆரம்பிக்க, டி.வி.ஆர். அவர்கள் ஆரம்பித்து, நடத்திய வரலாரைப் படிக்கும்போது, ஒரு திரில்லர் கதையைப்போலவே இருந்தது என்றால் அது மிகை ஆகாது. தன்னலம் கருதாமல் தமிழ் மக்களுக்காக அவர் பாடுபட்டதை இந்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும். ஓங்குக, டி.வி.ஆர். அவர்களின் புகழ் - வாழ்க, வளர்க தினமலரின் வளர்ச்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை