உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ., பலுான் போன்றது; ஊசியால் குத்தினால் வெடிக்கும்: சேகர்

தமிழக பா.ஜ., பலுான் போன்றது; ஊசியால் குத்தினால் வெடிக்கும்: சேகர்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி: வரும் 2026 சட்ட சபை தேர்தலில், தி.மு.க., முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்.

மண்ணை கவ்வும்

மதத்தை வைத்து, தமிழகத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது. அது எடுபடாது. தமிழகத்தை பொறுத்தவரை, பா.ஜ., வளர்ச்சி என்பது ஊதப்பட்ட பலுான் போன்றது; பார்த்தால் பெரிதாகத் தெரியும். ஆனால், சின்ன ஊசி குத்தினால் கூட வெடித்து சிறுத்து விடும். தமிழக பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தால், கட்டாயம் அ.தி.மு.க., மண்ணை கவ்வும். பா.ஜ.,வுடன் எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும், அக்கட்சிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.

நல வாரியம்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற நிலை இப்போது இல்லை. பிராமணர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் சென்று, எந்த பிராமணரும் தன் சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என கேட்கவில்லை. தமிழகத்தில், 10 லட்சம் பிராமணர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களுக்கு நல வாரியம் தேவை. முதல்வரிடம் கேட்டுள்ளேன்.அதை முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்தால், தமிழகம் முழுதும் தி.மு.க.,வுக்காக நான் பிரசாரம் செய்வேன். ஐந்து லட்சம் பிராமனர்கள் ஓட்டையும் தி.மு.க.,வுக்கு வாங்கிக் கொடுப்பேன். அதனால், ஸ்டாலின் அதை செய்து கொடுப்பார். மற்றபடி, நான் எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nagarajan S
மார் 24, 2025 19:47

சினிமாகாரர் போயும் போயும் யாரை நம்புவார்? சினிமாக்காரர்களைதானே? பிராமணர்களுக்கு அநீதி இழைக்கும் ஒரு கட்சியை ஆதரிப்பேன் என்றுகூறும் இவரை என்னவென்பது?


R Barathan
மார் 24, 2025 13:36

இவன் ஒரு கழை கூத்தாடி.. இவனை மாதிரி ஒரு துரோகியை பார்த்ததில்லை.இவன் போகாத கட்சியே கிடையாது. இவனது வாய் துடுக்கால் நீதிமன்றங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். ப்ராமணர்களின் ஓட்டை பெற்று ப்ராமணர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுககாவக்கு காவடி எடுக்கும் இவர்களை போன்ற துரோகிகளை ப்ராமணர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.


R.Natatarajan
மார் 24, 2025 13:13

எந்த பிராமணர் இவரிடம் வந்து ஆதரவு கேட்டார்.


Bhaskaran
மார் 24, 2025 12:52

திமுக இவர்களுக்கு பட்டை நாமம் போடுவது உறுதி


S.V.Srinivasan
மார் 24, 2025 12:00

உன் உடம்பு கூடத்தான் பலூன் மாதிரி இருக்கு.


Suresh Sivakumar
மார் 24, 2025 10:59

This guy is a .........


sara
மார் 24, 2025 10:58

புத்தி பேதலிச்சுட்டது...


Ramanujadasan
மார் 24, 2025 09:25

ப்ராமணரில் அவ்வப்போது குல விரோதிகளும், துரோகிகளும் தலை எடுத்து விடுகின்றனர். ஹிந்து பேப்பர் ராம், எஸ் வி சேகர், கமல ஹாசன், விகடன் ஸ்ரீனிவாசன் போன்றோர்.


sankaranarayanan
மார் 24, 2025 08:55

நீ எஸ் வி சேகர் எந்த கட்சிக்குப்போனாலும் உன்னை ஊசியால்தான் குத்தி குத்தி வெளியே அனுப்பியுள்ளனர்


sankar
மார் 24, 2025 08:08

இவர் ஒரு ஊசிப்போன புளியோதரை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை