உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிப்பறையில் ரேஷன் அரிசி மூட்டைகள்; தமிழக பா.ஜ., கடும் கண்டனம்

கழிப்பறையில் ரேஷன் அரிசி மூட்டைகள்; தமிழக பா.ஜ., கடும் கண்டனம்

சென்னை: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கழிப்பறையில் வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையில் இருந்து, அரிசியை எடுத்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில், ரேஷன் கடை அரிசி மூட்டைகள், கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்தது, அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை மக்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களை, கழிப்பறையில் அடுக்கி வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம். பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள், அவர்களை கண்காணிக்க தவறிய அமைச்சர்களுக்கு கழிப்பறையில் வைத்திருந்த மூட்டையில் இருந்து அரிசியை எடுத்து, சமையல் செய்து சாப்பிடச் சொல்ல வேண்டும். ஏற்கனவே, தமிழகத்தில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அல்லல்படும் நிலையில், கழிப்பறையில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து, நோய் தொற்றும் ஏற்பட வேண்டுமா? கடந் த பட்ஜெட்டில், உணவு துறைக்கான நிதியை அரசு குறைத்ததால், இன்று தானிய கிடங்குகள் பராமரிப்பின்றி, உணவு பொருட்கள் மழையில் நனைந்து வீணாகின்றன. இந்த சூழலில், ரேஷன் பொருட்களையும் சேமித்து வைக்க இடமில்லாமல், கழிப்பறையை தி.மு. க., அரசு நாடிச் செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை